சென்னை ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஷ்மீர் சட்டசபை தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, சென்னையில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் காஷ்மீர் சட்டசபை அருகே தீவிரவாதிகளின் தற்கொலைப் படையினர் கார் குண்டுதாக்குதல் நடத்தினர். இதில் தீவிரவாதிகள் உள்பட 42 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களைக் குண்டு வைத்து தாக்கவும் தீவிரவாதிகள்திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.

சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை மப்டியில் உள்ள போலீசார் கண்காணித்து வருகின்றனர். வீடியோகாமிராக்கள் மூலமும் அனைத்து இடங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமும் 3 முறை ரயில் தண்டவாளங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. அனைத்துச் சோதனைகளுக்கும் போலீஸ்மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காகச்செல்கிறார்கள்.

வெளியூரிலிருந்து வரும் ஒவ்வொரு ரயிலும், பயணிகள் வெளியேறிய பிறகு, கடும் சோதனைக்குஉட்படுத்தப்படுகின்றன. சோதிக்கப்பட்ட ரயில்களின் கதவுகள் மூடப்பட்டு, பாதுகாப்பாக யார்டுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

மீண்டும் அவை புறப்படுவதற்கு முன், நன்கு பரிசோதிக்கப்பட்ட பின்னரே ரயில் நிலையங்களுக்குக்கொண்டுவரப்படுகின்றன.

பயணிகள் அனைவரும் முழுக்க முழுக்கப் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற