2 உயர்மட்ட விசாரணைக் குழுக்கள் அமைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நேற்று நடந்த விமானக் கடத்தல் புரளி குறித்து விசாரணை செய்வதற்கு உயர்மட்டக் குழு ஒன்றை பிரதமர்வாஜ்பாய் அமைத்துள்ளளார்.

மும்பையிலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று நேற்று நள்ளிரவில் கடத்தப்பட்டதாக புரளிகிளம்பியது.

முன்னதாக இதுகுறித்து முழுமையாக விசாரணை செய்ய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர்எச்.எஸ்.கோலா தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்ஷானவாஸ் ஹூசேன் அறிவித்தார்.

இந்தக் குழுவில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்பு இயக்குனர் ஹசன்கபூர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஒரு வாரத்தில் இந்தக் கமிட்டி விமானக்கடத்தல் பற்றி விசாரணை நடத்தி தனது முழு அறிக்கையை அரசுக்குஅளிக்கும என்றார்.

இரண்டாவது கமிட்டி:

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 1 மணிநேரத்தில் பிரதமர் வாஜ்பாய் மற்றொரு கமிட்டியை அமைத்துள்ளார்.உள்துறை அமைச்சகத்தின் தனிச் செயலாளர் எஸ்.பி. முஹபத்ரா அந்தக் கமிட்டியின் தலைமையில் இந்தக் கமிட்டிஅமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவிலும் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனர் எச்.எஸ்.கோலா மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின்பாதுகாப்பு இயக்குநர் ஹசன் கபூர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அமைச்சர் அறிவித்த கமிட்டியின் தலைவருக்குப் பதிலாக வேறு தலைவரை மட்டும் பிரதமர் நியமித்துள்ளார்.

விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் ஏ.எச்.ஜங் கூறுகையில், இன்னும் 15 நாட்களுக்குள் இந்தக் கமிட்டி விமானக்கடத்தல் பற்றி விசாரணை நடத்தி தனது முழு அறிக்கையை அரசுக்கு அளிக்கும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற