மும்பை-டெல்லி விமானம் கடத்தப்பட்டதா: நடந்தது என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மும்பையிலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானம் கடத்தப்பட்டதாக தவறான தகவல் பரவியது.கடத்தல்காரர்கள் பயணிகள் மத்தியில் இருப்பதாக நினைத்த பைலட்கள் தங்கள் அறையின் (காக்பிட்) கதவை மூடிக்கொணடு விமானத்தை அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினர்.

ஆனால், பயணிகளோ கடத்தல்காரர்கள் விமானிகளின் காக்பிட் அறையில் இருப்பதாக நினைத்து அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தனர்.

உண்மையில் விமானத்தில் கடத்தல்காரர்களே இல்லை என்ற விவரம் 4 மணி நேர நாடகத்துக்குப் பின்னர் தான்தெரியவந்தது.

புதன்கிழமை நள்ளிரவு சுமார் 11.15 மணிக்கு மும்பையிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ்-அல்லையன்ஸ் ஏர்சி.டி.7444 விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது. இதில் 46 பயணிகள் இருந்தனர். 4 விமானப் பணியாளர்களும் 2விமானிகளும் இருந்தனர்.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அகமதாபாத் விமான நிலைய கண்ட்ரோல் டவருக்கு ஒரு டெலிபோன் அழைப்புவந்தது. மும்பை-டெல்லி விமானம் கடத்தப்பட்டிருப்பதாக டெலிபோன் செய்தவர் கூறினார். அப்போதுதான் அந்தவிமானம் அகமதாபாத் மீது பறந்து கொண்டிருந்தது.

இதையடுத்து விமானத்தில் கடத்தல்காரர்கள் இருப்பதாக விமானிகளுக்கு அகமதாபாத் கண்ட்ரோல் டவர்அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். கடத்தல்காரர்கள் தங்கள் அறைக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க நினைத்தவிமானிகள் உடனடியாக தங்கள் காக்பிட் அறையின் கதவை மூடி சீல் வைத்துவிட்டனர்.

விமானத்தில் கடத்தல்காரர்கள் இருப்பதாக டெல்லி விமான நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்துடெல்லி விமான நிலையத்தில் கமாண்டோக்கள் குவிக்கப்பட்டனர். போலீசாரும் குவிந்தனர்.

விமானத்தை வழக்கமான ஓடுபாதையை விட்டுவிட்டு வேறிடத்தில் தரையிறக்குமாறு விமானிகளுக்கு டெல்லிவிமான நிலைய கண்டரோல் டவர் அதிகாரிகள் தகவல் தந்தனர்.

இதைத் தொடர்ந்து பைலட்கள் விமானத்தை விமான நிலையத்தின் ஒதுக்குப் புறமான ரன் வேயில் இறக்கினர்.நள்ளிரவு 12.50 மணிக்கு விமானம் தரையில் நின்றவுடன் உடனடியாக அந்த விமானத்தை வழி மறித்து ஒருலாரியை கமாண்டோக்கள் நிறுத்தினர். மீண்டும விமானம் பறந்துவிடாமல் தடுக்க இந்த நடவடிக்கையைகமாண்டோக்கள் எடுத்தனர்.

விமானத்தையும் சுற்றி வளைத்தனர். தீயணைப்பு வண்டிகள், பாம் ஸ்குவாட் வேன்கள், ஆம்புலன்ஸ் வேன்கள்அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

விமானம் கடத்தப்பட்ட தகவல் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோருக்குத்தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அத்வானி தனது அதிகாரிகளுடன் விமானத்துறை தலைமை அலுவலகம் விரைந்தார். விமானத்துறைஅமைச்சர் ஷானவாஸ் ஹூசைனும் அங்கு விரைந்தார். பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, விமானத்துறைஅதிகாரிகளும் அங்கு குவிந்தனர்.

கடத்தல்காரர்களை சமாளிப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். கமாண்டோ ஆப்பரேஷன் மூலம்கடத்தல்காரர்களை பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டது. எக் காரணம் கொண்டும் விமானத்தை டெல்லியில் இருந்துகிளம்ப விடக் கூடாது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

டெல்லியில் தரையிறங்கிய பிறகும் விமானத்தின் கதவுகள் திறக்கப்படாததால் குழப்பமடைந்த பயணிகள் முதலில்வேறு ஏதாவது காரணம் இருக்கும் என நினைத்தனர். ஆனால், விமானிகளின் காக்பிட் அறையும்மூடப்பட்டிருந்ததால் அவர்களுக்கு சந்தேகம் வந்தது. விமானிகள் அறையில் கடத்தல்காரர்கள் இருப்பதாகஅவர்களுக்குள் சந்தேகம் ஏற்பட்டது.

இந் நிலையில் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்த்த பயணிகளின்உறவினர்கள் அவர்களை செல்போன்களில் தொடர்பு கொண்டனர். விமானம் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கூறினர். அப்போது தான் விமானிகள் அறையில் கடத்தல்காரர்கள் இருப்பதாக பயணிகளுக்கு நிச்சயமான சந்தேகம்ஏற்பட்டது.

காக்பிட்டுக்குள் கடத்தல்காரர்கள் புகுந்துவிட்டனர் என்று பயணிகளும், காக்பிட்டுக்கு வெளியே பயணிகள்அமரும இடத்தில் கடத்தல்காரர்கள் உள்ளனர் என்று பைலட்டுகளும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

அத்வானி தலைமையில் கூடிய குழு 3 மணி ஆலோனைக்குப் பின் விமானத்துக்குள் அதிரடியாக நுழையுமாறுகமாண்டோக்களுக்கு உத்தரவு கொடுத்தனர். இதையடுத்து அதிகாலை 4.10 மணிக்கு கமாண்டோக்கள் விமானிகள்அறையில் அதிரடியாக நுழைந்தனர்.

ஆனால், அங்கு கடத்தல்காரர்கள் இல்லை என்று தெரிந்து கொண்ட பின்னர் பயணிகள் பகுதிக்குள் 4கமாண்டோக்கள் புகுந்தனர். அங்கும் கடத்தல்காரர்கள் இல்லை.

இதையடுத்துத் தான் ஏதோ குழப்பம் நடந்திருப்பது அனைவருக்கும் தெரியவந்தது.

விமானம் கடத்தப்படவில்லை என்று உறுதி செய்து கொண்ட பின்னர் பயணிகள் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.கிட்டத்தட்ட 4 மணி நேரம் விமானத்தில் சிக்கிக் கொண்டு தவித்த பயணிகள் ஒரு வழியாய் தரையில் காலைவைத்தனர்.

விமானத்தில் சிக்கியிருந்த தங்களது உறவினர்கள் குறித்த கவலையுடனும் கண்ணீருடனும் காத்திருந்தவர்கள்அவர்களை கட்டித் தழுவி வரவேற்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற