காங்கிரஸ்-புதிய தமிழகம் கூட்டணி உறுதியாகவில்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் கட்சியுன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி இன்னமும் உறுதியதியாகவில்லை.இது குறித்த இ-று--தி முடிவு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிஇணைந்து போட்டியிட்டது. ஆனால் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுககூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் புதியதமிழகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்கிருஷ்ணசாமி. அவர் அமெரிக்காவில் இருந்த போது புதிய தமிழகம் கட்சிநிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைநடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது புதிய தமிழகம் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையேதொகுதி உடன்பாடு ஏற்பட்டது. புதிய தமிழகம் கட்சிக்கு திருநெல்வேலி மேயர்தொகுதி மற்றும் பல நகராட்சிகளும் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியகிருஷ்ணசாமி கூறுகையில் காங்கிரஸ்-புதிய தமிழகம் கட்சி கூட்டணி இன்னமும்உறுதியாகவில்லை என்று கூறினார்.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துபோட்டியிட்டது புதிய தமிழகம்.

நான் அமெரிக்கா சென்றிருந்தது கருணாநிதிக்கு தெரியும். நான் அமெரிக்காவில்இருந்தாலும் கட்சி நிர்வாகிகள் சென்னையில்தான் இருந்தனர். கூட்டணி குறித்தபேச்சுவார்த்தைக்கு புதிய தமிழகத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. தகவலும்தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் அமைத்த அணியிலிருந்து புதிய தமிழகத்திற்கு அழைப்புவந்தது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் எங்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

காங்கிரசுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துள்ளது, இன்னமும்இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள்தமிழகத்தின் எல்லா இடங்களிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இறுதி முடிவைவெள்ளிக்கிழமை அறிவிப்போம் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற