தேர்தல்: சென்னையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலின் போது அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க சென்னையில் 3000க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகர் போலீஸ் கமிஷ்னர்முத்துக்கருப்பன் கூறினார்.

வரும் 16ம் தேதி சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான வாக்குப பதிவு நடைபெறுகிறது. இதற்கானபாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர் போலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது,

சென்னையில் மொத்தம் 3671 வாக்கு சாவடிகள் உள்ளன. இவற்றில் 210 வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவைஎன அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வாக்குசாவடிகளில் கூடுதல் போலீசார் காவலில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மொத்தம் 3200 போலீசார் காவலில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் 45 அதிரடிப்படையைச் சேர்ந்த போலீசாரும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வரும் 10ம் தேதிக்குள் சென்னையில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள், தங்கள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைஅருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்க வேண்டும்.

அவை 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை போலீஸ் ஸ்டேசனில் பாதுகாப்பாக வைக்கப்படும். 25ம் தேதிக்குப் பிறகுஅவற்றை அதன் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற