எங்கள் பெயரைக் கெடுக்க இந்தியா முயற்சி: பாகிஸ்தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் பெயரைக் கெடுக்க இந்தியா நடத்திய நாடகமே, விமானக் கடத்தல் என்றுஅந்நாடு கூறியுள்ளது.

நேற்று நள்ளிரவு மும்பையிலிருந்து டெல்லிக்குச் சென்ற விமானம் ஒன்று கடத்தப்பட்டதாக தவறான தகவல்வெளியானது. 3 மணி நேரம் நீடித்த இந்த மர்மம் பிறகு வெறும் புரளி என்று தெரியவந்தது.

இந்த விமானக்கடத்தல் பாகிஸ்தானின் பெயரைக் கெடுப்பதற்காக இந்திய உளவுத்துறையால் நடத்தப்பட்டநாடகம் என்று பாகிஸ்தான் வர்ணித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு டிவியான பி.டி.வி. வெளியிட்டுளள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கடந்த அக்டோபர் 2ம் தேதி தனியார் செய்தி நிறுவனமான என்.என்.ஐ. ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில்இந்திய உளவுப்பிரிவினர் ஒரு விமானத்தைக் கடத்தி அதை இஸ்லாமாபாத்துக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்என்றும். மேலும் அதன் மூலம் பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடு என்று உலகம் முழுவதும் பறைசாற்றவேண்டும்என்பது அவர்கள் திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்து.

இதையடுத்து பாகிஸ்தான் அரசும், நாட்டின் வான் எல்லைக்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் விமானம் எதுவும்நுழைய முயன்றால் அனுமதிக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 1ம் தேதி காஷ்மீர் மாநில சட்டமன்றக் கட்டிடத்தின் மீது ஜெய்ஸ்-ஏ-முகம்மத் தீவிரவாதிகள்மோதியதற்கு , பாகிஸ்தான் மீது பழியை சுமத்த இந்திய உளவுத்துறையின் நாடகம் தான் இந்த விமானக் கடத்தல்.இவ்வாறு அந்த டிவியில் செய்தி வெளியிடப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற