உள்ளாட்சி தேர்தல்... பாதுகாப்பு பணியில் 86 ஆயிரம் போலீசார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது 86 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபடுவார்கள் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. நெய்ல்வால் கூறியுள்ளார்.

இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாகநடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள் கிழமைமுடிவடைந்தது.

வேட்பு மனு பரிசீலனை நேற்று (புதன்கிழமை) முடிவடைந்தது. வேட்புமனுவைதிரும்பப் பெற நாளை கடைசி நாளாகும். தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல்ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழகம் முழுவதிலும் 45 ஆயிரம் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களில் உள்ளூர் போலீசார் 20 ஆயிரம்பேரும், ஆயுதப்படை போலீசார் 10 ஆயிரம் பேரும், தனிப்படை போலீசார் 4 ஆயிரம்பேரும் அடங்குவர்.

இவர்கள் தவிர அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் மத்தியப்பிரதேசமாநிலத்தைச் சேர்ந்த 12 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்படஉள்ளனர்.

முன்னாள் ஊர்க்காவல் படை, முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி, என்.எஸ்.எஸ்சைச்சேர்ந்த 41 ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள்அனைவரையும் சேர்த்து மொத்தம் 86 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்படடுவார்கள்.

இவர்கள் அவைரும் வரும் 12ம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

அதிரடிப்படை போலீசார் 4 ஆயிரம் பேரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுஇருப்பார்கள் என்றார் டி.ஜி.பி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற