For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தற்காலிக டிரைவர்கள் குறித்த வழக்கு: நாளை விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அனுபவம் இல்லாத தற்காலிக டிரைவர்களை பணியில் அமர்த்தியது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதுஉயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடக்கிறது.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டுப் போராட்டம் நடத்தி வருவதால், தற்காரிலகமாகடிரைவர்களை நியமித்து அரசுப் பேருந்துகள் இயக்ககப்பட்டுவருகின்றன. இந்த டிரைவர்கள் அனைரும் போதியஅனுபவம் இல்லாதவர்கள், இதனால் பல விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. 40க்கும் மேலானாவர்கள்பலியாகியுள்ளனர்.

இதன் அடிப்படையில் விசாரணை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி நாராயணகுரூப் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி சிவசுப்ரமணியன் ஆகியோர்அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் வழக்கைத் தானாக எடுத்துக்கொண்டு, அரசுக்கு பதிலளிக்குமாறு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பு பயிற்சி பெறாத டிரைவர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கத் தடைவிதிக்க வேண்டும் என்றுகோரி காங்கிரஸ் சட்டப்பிரிவுத் தலைவர் சூர்யபிரகாசம் என்பவரும் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்துள்ளார்.

மேலும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவேண்டும் என்று கோரி மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். இந்தஇரண்டு மனுக்கள் மீதான விசாரணை நாளை நடக்கிறது.

இந் நிலையில் இந்த மனுக்களுக்கு பதிலளித்து தமிழக போக்குவரத்துத் துறைச் செயலாளர் உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்தள்ளார். அதில்,

போனஸ் உச்சவரம்புச் சட்டப்படி, போராடும் தொழிலாளர்களுக்கு போனஸ் பெறத் தகுதியில்லை. அடிப்படைச்சம்பளம் மற்றும் பஞ்சப்படி ஆகியவற்றோடு சேர்த்து ரூ.3,500 அல்லது அதற்குக் குறைவாக சம்பளம்பெறுபவர்களுக்கு மட்டுமே போனஸ் தரமுடியும்.

ஆனால் தமிழக அரசு பெருந்தன்மையாக அனைவருக்கும் 8.33 சதவீத போனஸ் வழங்க முடிவுசெய்துள்ளது.போராட்டத்தில் ஈடுபடுவபர்கள் முன்பே நோட்டீஸ் கொடுக்கவில்லை.

மேலும் தமிழக அரசுக்கு உள்ள நிதிநெருக்கடியில் டீசல் சப்ளை செய்பவர்களுக்கும், கடன் வாங்கிய பணத்துக்குவட்டியும் கூட செலுத்த முடியவில்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X