தமிழக பந்த்: முழு ஆதரவில்லை
சென்னை:
தமிழகத்தில் எதிர்க் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த பந்த்துக்கு மக்களிடம் முழு ஆதரவு கிடைக்கவில்லை.தமிழகம் முழுவதுமே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
சமீபத்தில் மின்சார, பஸ், ரேஷன் பொருள்களின் விலையும் கட்டணமும் உயர்த்தப்ட்டதைக் கண்டித்து திமுக,த.மா.கா, பா.ம.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இந்த பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
ஆனால், இந்த பந்த்துக்கு சென்னையில் அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை. மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லைமாவட்டங்களில் தான் ஓரளவுக்கு ஆதரவு இருந்தது.
மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள் இயங்கின. சில ஊழியர்கள் தான் பணிக்கு வரவில்லை. வங்கிகள் முழுஅளவில் வழக்கம்போல் இயங்கின.
அதே போல அரசு பஸ்கள் முழு அளவில் இயக்கப்பட்டன. பள்ளிகளும், கல்லூரிகளும் வழக்கம்போல்திறந்திருந்தன.
சென்னையில் அண்ணாநகர் போன்ற இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், பாண்டிபஜார்போன்ற இடங்களில் பெரும்பாலான கடைகளும் திறந்திருந்தன. அண்ணாநகரில் ரெளடிகளுக்கு பயந்தே கடைகள்மூடப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பந்த்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மிக பலத்த பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது. நடமாடும் போலீஸ் படைகள் மாநிலம் முழுவதும் சுற்றி வந்தவண்ணம் உள்ளன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications