12 ஆண்டுகளுக்குப் பின் காபூலில் பறந்த அமெரிக்க கொடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

கடந்த 1989ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள அமெரிக்கதூதரகத்தில் அந்நாட்டின் கொடி ஏற்றப்பட்டது.

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக 1989ல் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டதையடுத்து, அங்கிருந்த கொடியும்இறக்கப்பட்டது. பின்னர் 1996ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தறகு தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான்இருந்தவரை இங்கு அமெரிக்க தூதரகம் செயல்படவில்லை.

செப்டம்பர் 26ம் தேதி இந்தத் தூதரகக் கட்டடத்தின் முன் வாசலை தாலிபான்கள் தீயிட்டு தகர்த்தனர். பின்னர்நடந்த அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு, கடந்த நவம்பர் 13ம் தேதி வடக்கு கூட்டணி படையினர் வசம் காபூல்நகரம் வந்தது.

பின்னர் இங்குள்ள அமெரிக்கத் தூதரகம் சீரமைக்கப்பட்டது. இன்று வெற்றிகரமாக இரண்டு அமெரிக்க மெரைன்வீரர்கள் அங்கு அமெரிக்க கொடியை ஏற்றிப் பறக்க விட்டனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற