வேலை தேடும் 85 லட்சம் இளைஞர்கள்: சிதம்பரம் கவலை
கோயம்புத்தூர்:
இந்தியாவில் ஆண்டுதோறும் 85 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி அலைகின்றனர் என்று தமிழ் மாநிலகாங்கிரஸ் பேரவை தலைவர் ப. சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.
டாக்டர் சி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார் பத்தாவது நினைவுச் சொற்பொழிவின்போது அவர் பேசியதாவது:
அவிநாசிலிங்கம் தன்னுடைய 32வது வயதில் சட்டசபை உறுப்பினரானார். அடுத்த பத்து ஆண்டுகளிலேயேஅமைச்சரானார். தன்னுடைய 60வது வயதில் அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டார்.
தமிழைப் பயிற்று மொழியாக அறிவித்தவர் அவிநாசிலிங்கம். மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக தமிழ்ஆசிரியர்களுக்கும் சம்பளம் கிடைக்கச் செய்தவர்.
இன்றைய இளைஞர்களும் வயதானவர்களை நம்பியிருக்காமல் பொறுப்புகளை ஏற்க முன்வர வேண்டும்.
விடுதலைக்கு முன்னரும் பின்னரும் என்று இந்தியாவின் வளர்ச்சியைப் பிரித்துப் பார்ப்பதைப் போலவே, 1991க்குமுன்-பின் என்றும் பிரித்துப் பார்க்க வேண்டும்.
1991 வரை மொத்த வளர்ச்சி குறைவாகத்தான் இருந்தது. இதற்குப் பிறகுதான் 7 சதவீத வளர்ச்சி என்பதுசாத்தியமானது.
ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிடும் வழிமுறைகளில் சில அந்நாட்டின் வேலை வாய்ப்பின்மை, வறுமை,ஒருங்கிணைந்த பொருளாதாரம் ஆகியவை முக்கியமானவை.
அரசு நிர்வாகம் சரியாக நடக்காத மாநிலங்களில்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் அதிகம்உள்ளனர்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா போன்ற மாநிலங்களில் 44 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இதற்குக் காரணம் அங்கெல்லாம் அரசு நிர்வாகம் சரியாக இல்லைஎன்பதுதான்.
உதாரணமாக, பீகாரில் 16 சதவீதம் பேர் வறுமையில் வாழ்ந்தாலும், அந்த மாநிலம் பயன்படுத்திக் கொள்ளும்மானியம் 5 சதவீதம் மட்டுமே. காரணம் - இம்மாநிலத்தில் அரசு நிர்வாகம் சரியாக இல்லை.
ஆனால் கேரளாவில் வறுமையில் வாழ்பவர்கள் 2 சதவீதமாக இருந்தாலும் இம்மாநிலம் பெறும் மானியம் 10சதவீதமாகும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையை 30 கோடியிலிருந்து 26 கோடியாக கடந்த 50ஆண்டுகளில் குறைத்துள்ளோம். இது போதாது என்றார் சிதம்பரம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications