நக்கீரன் நிருபர் சித்ரவதை: விஜயகுமார் மீது புகார்
ஈரோடு:
வீரப்பன் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நக்கீரன் நிருபர் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாகத்தெரிகிறது.
கோபாலுக்கும், வீரப்பனுக்கும் தொடர்பு இருப்பதாக எழுதி கொடுக்கும்படி, தமிழக அதிரடிப்படை துணைத்தலைவராக இருந்த ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் தன்னை சித்ரவதை செய்ததாக நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம்நிருபர்களிடம் தெரிவித்தார்.
(இப்போது இந்த விஜய்குமார் சென்னை நகர போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்டுவிட்டார். அதிரடிப் படையில்இருந்து விலகி வந்துவிட்டார்.)
வீரப்பனுக்கு ஆயுதம் கொண்டு சென்றதாக சிவசுப்பிரமணியன் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இப்போது அவர் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தேசியப் படைத் தீவிரவாதிகளால் வெள்ளித்திருப்பூரில் போலீஸ் நிலையம்தாக்கப்பட்டது தொடர்பாக சிவசுப்பிரமணியத்தை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என பவானி நீதிமன்றத்தில்போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி கிருஷ்ணன், சிவசுப்பிரமணியத்தை நேற்று பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தஉத்தரவிட்டார். இதை தொடர்ந்து சிவசுப்பிரமணியத்தை போலீசார் நேற்று நீதிமன்றத்துக்கு கொண்டு வந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிவசுப்பிரமணியத்தை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிஅளித்தார். அதே நேரத்தில் அவரது உயிருக்கும், உடமைக்கும் எந்த தீங்கும் வராமல் பாதுகாக்க வேண்டியதுபோலீசாரின் பொறுப்பு என்றும் நீதிபதி எச்சரித்தார்.
சித்திரவதை செய்தார் விஜய்குமார்:
இந்த விசாரணைக்காக பவானி நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட சிவசுப்பிரமணியன் கூறியதாவது:
நக்கீரன் கோபாலுக்கும், வீரப்பனுக்கும் தொடர்பு இருப்பதாக எழுதிக் கொடுக்கும்படி தமிழக அதிரடிப்படைதலைவராக இருந்த ஏ.டி.ஜி.பி., விஜயகுமார் (தற்போது சென்னை போலீஸ் கமிஷனர்) சிகரெட் சூடு வைத்தும்,உலக்கையால் கால்களில் அடித்தும் என்னை சித்ரவதை செய்தார்.
அந்த மாதிரி எழுதி தராவிட்டால் கர்நாடகாவில் இருந்து பிணம் தான் தமிழகத்துக்கு போய் சேரும் என்றுமிரட்டினார்.
வெள்ளித்திருப்பூர் காவல் நிலையம் தாக்கப்பட்டதில் எனக்கு சம்பந்தமில்லை. ஜனநாயகத்தின் இரண்டாவதுதூணாக விளங்கும் நீதித்துறையும், நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை துறையும் என்னுடன் இருப்பதால்நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் சிவசுப்பிரணியன்.
முன்னதாக சிவசுப்பிரமணியத்தை சந்திக்க நீதிமன்றத்துக்கு குழந்தையுடன் வந்த அவரது மனைவி ஜெயந்திஅவரைப் பார்த்தவுடன் கதறி அழுதார். குழந்தையைப் பார்த்தவுடன் சிவசுப்பிரமணியனும் உடைந்துபோய்அழுதார்.
செய்தி சேகரிக்க வந்திருந்த நிருபர்களும் இதைப் பார்த்து கண்கலங்கினர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications