போலி வாக்காளர்கள்: விசாரணையைத் துவக்கினார் மத்திய தேர்தல் அதிகாரி
சென்னை:
ஆண்டிப்பட்டி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வந்தபுகாரையடுத்து, இன்று (வியாழக்கிழமை) சென்னை வந்த மத்திய தேர்தல் அதிகாரி கே.ஜே. ராவ் உடனடியாகவிசாரணையைத் தொடங்கியுள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் முன் அத்தொகுதியில் உள்ள அரசியல்கட்சித் தலைவர்களை ராவ் இன்று காலை சந்தித்துப் பேசினார்.
அதிமுகவைச் சேர்ந்த சைதை. துரைசாமி, திமுக எம்.பியும் இதுபற்றி புகார் கொடுத்தவருமான குப்புசாமி உள்படபல அரசியல் கட்சித் தலைவர்கள் ராவிடம் வாக்காளர் பட்டியல் குறித்து விளக்கம் அளித்தனர்.
திமுக ஆட்சிக் காலத்திலேயே போலி வாக்காளர் அடையாள அட்டைகளெல்லாம் வந்து விட்டன என்று சைதைதுரைசாமி தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார்.
இன்று சைதாப்பேட்டைத் தொகுதியில் விசாரணையை முடித்துக் கொள்ளும் ராவ், நாளை ஆண்டிப்பட்டிதொகுதிக்குச் சென்று போலி வாக்காளர்கள் குறித்து விசாரணை நடத்துவார்.
அதன் பிறகு வாணியம்பாடி தொகுதியிலும் அவர் வாக்காளர் பட்டியல்களைச் சரிபார்க்கவுள்ளார்.
அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு, வரும் 14 அல்லது 15ம் தேதி தலைமைத் தேர்தல் கமிஷனிடம்அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளார் ராவ்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications