நக்கீரன் கோபால் வழக்கு: ஜெ. தவிர அனைவருக்கும் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன்னை கைது செய்யத் தடை விதிக்கக் கோரி நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி,ஜெயலலிதா தவிர அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

திமுக ஆட்சியின்போது சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில், நக்கீரன் கோபால் அரசு தூதுவராகசெயல்பட்டார். ராஜ்குமார் கடத்தலின் போது பணம் கை மாறியிருக்கலாம் என்று அப்போதிருந்தே அதிமுகசொல்லி வருகிறது.

இப்போது அதிமுக ஆட்சி வந்த பிறகு நக்கீரன் நிருபன் சிவசுப்ரமணியத்தை கைது செய்து வீரப்பன் வழக்கில்தொடர்புப் படுத்தி போலீசார் விசாரித்து வருகிறது.

இதனால் போலீசார் தன்னையும் கைது செய்து தொல்லை செய்யலாம் என்று கருதிய கோபால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

சந்தன வீரப்பன் தொடர்பான வழக்குகளில் என்னையோ, என் பத்திரிக்கைகளில் நிருபர்களாகபணிபுரிபவர்களையோ கைது செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உத்தரவிடவேண்டும்.

எனது பத்திரிக்கை வெளி வருவதில் அரசு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றுஅந்த மனுவில் கோபால் கூறிள்ளார்.

இம்மனுவில் தமிழக உள்துறைச் செயலாளர், கர்நாடக உள்துறைச் செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,அதிரடிப்படைத் தலைவர் தேவாரம், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் எஸ்.பியான ஹரிசேகரன் ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி சதாசிவம், ஜெயலலிதா தவிர மற்ற அனைவரும் பிப்ரவரி 6ம் தேதிக்குள்பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+