நாளை முதல் ஆண்டிப்பட்டியில் பன்னீர் பிரச்சாரம்
சென்னை:
ஆண்டிப்பட்டி சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயலலிதாவை ஆதரித்து முதல்வர்பன்னீர்செல்வம் நாளை (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம்மேற்கொள்கிறார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றிக் கனியைப் பறிப்பதற்காக அதிமுக சார்பில் பிரச்சாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பெரியகுளம் எம்.பியான தினகரன் அங்கேயே தங்கியிருந்து பிரச்சாரப் பணிகளைமேற்பார்வையிட்டு வருகிறார்.
அமைச்சர்கள் ஷிப்ட் முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அனைவரும் எளிமையான முறையில் கார் பவனிஇல்லாமல், கூடுமானவரை நடந்தே சென்று கூட கிராமங்களில் பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடிகர்கள் ராதாரவி, தாமு உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்நிலையில் பன்னீர்செல்வமும் பிரச்சாரத்தில் குதிக்கிறார். நாளை (பிப்.5) முதல் 7ம் தேதி வரைஆண்டிப்பட்டியில் பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்கிறார்.
இதற்காக அவர் நேற்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார் பன்னீர்செல்வம்.பின்னர் அங்கிருந்து குடகனாறு அரசு விருந்தினர் இல்லத்திற்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர்பிரச்சாரத்தை துவக்குகிறார்.
ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கும் பன்னீர்செல்வம் சென்று பிரச்சாரம் செய்கிறார்.குறிப்பாக முக்குலத்தோர் வசிக்கும் கிராமங்களில் அவர் அதிக அளவில் பிரசாரம் செய்யும் வகையில்திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications