நாளை பதவியேற்க ஜெ.க்கு ராசியான நாளா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டி தொகுதியில் அமோக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் ஜெயலலிதா 24 அல்லது 25ஆகிய தேதிகளில் ஒன்றில் முதல்வராகப் பதவியேற்பார் என்று தெரிகிறது.

ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடந்து முடிந்து 24ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. நண்பகல் 12 மணிக்குள்முடிவு தெரிந்து விடும். எனவே ஜெயலலிதா எப்போது முதல்வராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு இப்போதேதமிழகத்தில் சுறுசுறுப்படைந்துள்ளது.

எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற சான்றிதழை கையில் வாங்கிய பிறகு அன்று மாலையே முதல்வராக ஜெயலலிதாபதவியேற்பார் என்று ஒரு கருத்து உலவுகிறது.

இதன் பொருட்டு 24ம் தேதி மாலையில் அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் கூட்டப்படலாம் என்று கூறப்படுகிறது.இதற்கு வசதியாக 23ம் தேதி மாலையே அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் சென்னைக்கு வந்து விடுமாறுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்களாம்.

24ம் தேதி ஜெயலலிதா முதல்வர் ஆகலாம் என்பதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் ராசி எண் 9மற்றும் 6 ஆகும். எனவே 24ம் தேதிதான் சரியான தினம்.

மேலும் அன்று அவரது பிறந்த நாளுமாகும். எம்.எல்.ஏ. வாக வெற்றி பெறும் தினம், பிறந்த தினம் மற்றும்முதல்வராக பதவியேற்றால் அதையும் சேர்த்து முப்பெரும் விழாவாக அதை கொண்டாடி விடலாம் என்றுஅதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஒருவேளை 24ம் தேதி பதவியேற்காவிட்டால் 25ம் தேதிதான் ஜெயலலிதா பதவியேற்பார் என்று தெரிகிறது. இதன்கூட்டுத் தொகை ஜெயலலிதாவின் ராசி எண்ணாக இல்லாவிட்டாலும் கூட அன்று சுப முகூர்த்த நாள் என்பதால்அன்றைய தினம் ஜெயலலிதா பதவியேற்கலாம் என்று அதிமுகவின் ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.

27ம் தேதி ராசியான தினமாக கருதப்பட்டாலும் கூட அன்று நாள் நன்றாக இல்லை என்று கூறப்படுகிறது. எனவேஅன்று ஜெயலலிதா பதவியேற்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

ஜெயலலிதா பதவியேற்கும் இடம் கூட முடிவாகி விட்டதாம். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னைபல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தான் ஜெயலலிதா பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

இதற்காக அந்த மண்டப அரங்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வர் பதவியைஏற்றது இந்த இடத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது முறையாக முதல்வர் பதவியேற்ற ராஜ்பவன் அவருக்கு ராசியில்லாமல் போய் விட்டதால் மீண்டும்அங்கு முதல்வர் பதவியை ஏற்க மாட்டார் என்று உறுதியாக கூறப்படுகிறது.

தேதிகளும், இடம் குறித்தும் பலவிதமான பேச்சுக்கள் அடிபட்டாலும் கடைசியில் இதை நிர்ணயிக்கப் போவதுகாழியூர் நாரயணன்தான் என்பதையும் மறுக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+