யார் தலை உருளுமோ? கலக்கத்தில் அமைச்சர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கும்போது பல அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும் என்றுதெரிகிறது.

இது தொடர்பாக சில வாரங்களாகவே ஒரு பேச்சு இருந்து வந்தாலும், ஜெயலலிதாவே தனது பேச்சின் ஊடேஇதனை உறுதிப்படுத்தினார்.

போயஸ் கார்டனின் வெற்றி உரை நிகழ்த்திய அவரிடம் பல நிருபர்களும் நீங்கள் எப்போது மீண்டும்பதவியேற்பீர்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்க,

ஏன் அவசரப்படுகிறீர்கள் என்று கேட்ட ஜெயலலிதா தொடர்ந்து நான் எப்போது முதல்வராகப் பதவியேற்பேன்என்பது குறித்துப் பின்னர் அறிவிக்கிறேன்.

முதலில் இப்போதைய முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பின்னர் என்னை முதல்வராகப்பதவியேற்க ஆளுநர் அழைக்க வேண்டும். அதன் பின்னர் நான் அமைச்சர்கள் பட்டியலைத் தயார் செய்து தரவேண்டும் என்றார்.

அப்போது நமது நிருபர் ஜெயலலிதாவிடம் புதிய அமைச்சர்கள் பட்டியல் தயார் செய்யும்போது சில பேருடையதலைகள் உருளும் என்கிறார்களே என்று கேட்டார்.

இதற்கு சிரித்தபடியே பதில் தந்த ஜெயலலிதா, நான் பட்டியல் தரும்போதும் யார் யார் எல்லாம் மந்திரிகளாகஇருக்கப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்றார்.

இதனால், யார் தலை உருளுமோ என பல அமைச்சர்கள் இப்போதே கலங்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ஒருமூத்த அமைச்சரின் பதவிக்கு ஜெயலலிதா வேட்டு வைப்பார் என்று கூறப்படுகிறது.

அதே போல முதல்வர் பதவியை விட்டுத் தரும் பன்னீருக்கு மிக முக்கிய பதவி தரப்படலாம். பல மாதங்களாவேசபாநாயகர் காளிமுத்து தனக்கு அமைச்சர் பதவி கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அவருக்கு அமைச்சர் பதவிதந்துவிட்டு, பன்னீரை ஜெயலலிதா சபாநாயகராக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+