கிரிக்கெட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி
நாக்பூர்:
நாக்பூரில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 101 ரன்கள்வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வென்றது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முதல் டெஸ்டின் 4வதுநாளான நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டநேர இறுதியில் ஜிம்பாப்வே 152 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளைப்பறிகொடுத்தது.
இந்நிலையில் இறுதி நாளான இன்று ஜிம்பாப்வே எப்படியாவது இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்துவிடவேண்டும் என்று நிதானத்துடனே ஆடியது. பிரைஸ்ஸும், கிரிப்பரும் தொடர்ந்து விளையாடினர்.
ஆனால் ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சில் டிராவிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பிரைஸ். பிறகு வந்தயாருமே சிறப்பாக விளையாடவில்லை. ஹர்பஜன் சிங், அனில் கும்ளே ஆகியோரின் சுழற்பந்து வீச்சுக்குஜிம்பாப்வே வீரர்கள் "பலி"யாகினர்.
இறுதியில் 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் ஜிம்பாப்வே இழந்தது. கும்ப்ளே சிறப்பாக பந்து வீசிமொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்று விக்கெட்டே எடுக்காத ஹர்பஜன் இன்று மட்டும் 4விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 101 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்டைக் கைப்பற்றியுள்ளது.இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளைச் சாய்த்த கும்ப்ளே ஆட்ட நாயகனாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஸ்கோர் விவரம்:
ஜிம்பாப்வே
முதல் இன்னிங்ஸ் - 287/10
2வது இன்னிங்ஸ் - 182/10
இந்தியா
முதல் இன்னிங்ஸ் - 570/7
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட் டெல்லியில் 28ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications