ஸ்டாலின் மகன் திருமணம் நடந்தது
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் திருமணம் இன்று சென்னையில்நடந்தது.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கருணாநிதி முன்னிலையில் இந்தத் திருமணம் நடந்தது.உதயநிதியும், அவருடன் கல்லூரியின் பயின்ற கிருத்திகாவும் காதலித்து திருமணம் கொண்டுள்ளனர்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தாலி எடுத்துத் தர மிக எளிமையாக சுயமரியாதை வழக்கப்படி இத்திருமணம் நடந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் தலைவர் திருமாவளவன், சமீபத்தில் பாஜகவில் இணைந்த திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ்முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உள்பட ஏராளமான அரசியல் தலைவர்கள் இந்தத் திருமண விழாவில்கலந்து கொண்டனர்.
மேலும் ரஜினிகாந்த், கமலஹாசன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் வாலி உள்பட ஏராளமான திரையுலகக்கலைஞர்களும் உதயநிதியின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இத் திருமணத்தையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான திமுகவினரும், திமுக இளைஞர்அணியினரும் அறிவாலயத்தில் குவிந்துள்ளனர்.
முன்னதாக நேற்று மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ராம்மோகன் ராவ், ப.சிதம்பரம் ஆகியோர் உதயநிதி-கிருத்திகா தம்பதியை வாழ்த்தினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications