கேரளா, ஜார்க்கண்ட்டில் பந்த்
திருவனந்தபுரம்:
குஜராத் வன்முறை தொடர்பாக வி.எச்.பி. அழைப்பு விடுத்திருந்த நாடு தழுவிய முழு அடைப்பு (பந்த்)கேரளாவிலும் ஜார்க்கண்ட்டிலும் பலத்த பாதுகாப்புக்கிடையே தொடங்கியது.
கேரளாவில் பந்த்துக்கு முழு ஆதரவு இருந்தது. அலுவலகங்கள், கடைகள், பள்ளிகள் அனைத்தும்மூடப்பட்டிருந்தன.
ஏற்கனவே கேரள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் அரசுஅலுவலகங்களும் பள்ளிகளும் இயங்காமல் இருந்தன. இன்று அவை முழுவதுமாகச் செயல்படவில்லை.
சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் முழுவதுமாகத் தடைபட்டிருந்தது. இதனால் கேரளாவில் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தகாத சம்பவம் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட்டில்...
இதற்கிடையே ஜார்க்கண்டிலும் இன்று பந்த் நடைபெறுகிறது.
வி.எச்.பி. அமைப்பினர் இன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டிருந்த கடைகளை வற்புறுத்தி மூட வைத்தனர்.
இதுவரை இம்மாநிலத்தில் வன்முறைச் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றாலும், முக்கியப் பகுதிகளில்ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கரசேவைக்காக அயோத்திக்குக் கிளம்பிக் கொண்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட வி.எச்.பி. அமைப்பினரும்ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications