For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமர் கோவில் கட்ட அனுமதித்தால் கூட்டணியில் விலகுவோம்: கருணாநிதி அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அனுமதித்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து திமுக விலகும் என்றுதிமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகனுக்கும், சென்னை மயிலாப்பூர் மெளலான மகள் டாக்டர்சைராவுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு கருணாநிதி தலைமைதாங்கினார்.

மணமகன் இந்து, மணமகள் சைரா முஸ்லீம். இது ஒரு காதல் திருமணமாகும்.

இந்த திருமண விழாவில் கலைஞரின் மனைவி தயாளு அம்மாள், மேயர் ஸ்டாலின், மகன் அழகிரி, மத்தியஅமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய இணை அமைச்சர் ராஜா, முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருமண விழாவில் கருணாநிதி பேசியதாவது:

இது ஒரு சுயமரியாதை திருமணம். இந்த மாதிரி திருமணத்தில் தான் மதம், ஜாதி, நாள், நட்சத்திரம், பஞ்சாங்கம்பார்க்கப்படுவது இல்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், அக்னி, அருந்ததி, என்று யாரையும் சாட்சிக்கு அழைக்கவேண்டியது இல்லை.

இந்த திருமண முறையை தந்தை பெரியார் தொடங்கி வைத்தார். அண்ணா வழி நடத்தினார். இப்போது நாம் நடத்திகொண்டு இருக்கிறோம் என்பது நாடறிந்த உண்மை.

சாதி, மதங்களை கடந்து இங்கு காதல் திருமணம் செய்து கொண்ட இந்த மணமக்கள் வாழ்க்கையில் எல்லா வளமும்பெற்று வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

தஞ்சை மாவட்ட மக்கள் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தாங்கள் விளைவித்த நெல்லுக்கு நல்லவிலை கிடைத்துள்ளது. ஈரப்பதம் பற்றி கேட்காமல் எல்லா நெல்லையும் கொள்முதல் செய்கிறார்கள்.

இவை எல்லாம் தஞ்சை மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சி தான். இந்த நேரத்தில் இந்த திருமணம்மகிழ்ச்சிகரமான விழாவாக நடக்கிறது.

இந்த திருமணம் மதச்சார்பற்ற திருமணம் என்று பேசினார்கள். இது மத நல்லிணக்க திருமணம். இந்துவுக்கும்,இஸ்லாமியருக்கும் இணக்கத்தை கொண்டு வரும் மணவிழா. இது தான் நமது நாட்டுக்கு இப்போது தேவை.

மதச்சார்பற்ற அணி என்று ஒன்று இருக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு தான்மதச்சார்பற்றதன்மை இருக்க வேண்டும். எனவே மதச்சார்பற்ற அரசு தான் இருக்க முடியும்.

மதச்சார்பற்ற அரசாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றது. டெல்லியில் வாஜ்பாய் அறிவித்த தேசிய செயல் திட்டத்தில் மதச்சார்பின்மைக்கு உத்தரவாதம்தரப்பட்டுள்ளது.

அதற்கு ஆபத்து வந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இருக்காது. அதே போல் ராமர் கோவில் கட்டமத்திய அரசு அனுமதி அளித்தாலும் கூட்டணியில் இருந்து திமுக விலகும்.

அதற்காக ராமர் கோவில் கட்ட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் தான்கோவில் கட்டுவோம் என்ற பிடிவாதத்தால் குஜராத் இன்று ரத்தக்களறியாக காட்சி அளிக்கிறது.

இந்த கலவரத்தில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினரில் யார் முதலில் தாக்கப்பட்டனர் என்பது முக்கியம்இல்லை. இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுயமரியாதை என்பது கடவுள் மறுப்பு மட்டும் தான் என்ற கருத்து சிலரிடம் உள்ளது. ஒவ்வொரு மனிதனும்மற்றவர்களை மதிக்க வேண்டும். அப்படி மதிக்காதவர்களை நாம் மதிக்கக் கூடாது என்பதே உண்மையானசுயமரியாதை.

நான் சிறு வயதாக இருக்கும் போது படிக்க ஆசைப்பட்டேன். ஆனால் என் பெற்றோர் என்னை வித்வான் பயிற்சிபெற அனுப்பி வைத்தனர். எனக்கு பயிற்சி அளித்த வித்வான் உயர் ஜாதியினர் எதிரில் வந்தால் துண்டை எடுத்துஇடுப்பில் கட்டுவார். அது எனக்கு பிடிக்காததால் வித்வானிடம் செல்வதை விட்டு விட்டேன்.

விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலுள்ள சில கிராமங்களில் இன்றும் தாழ்த்தப்பட்டோர்தாங்கள் சொந்தமாக காசு கொடுத்து வாங்கிய செருப்பை சில இடங்களில் போட முடியாமல் கையில் எடுத்துபோகின்றனர்.

அதே போல் சிலர் மாட்டு வண்டியை உட்கார்ந்து ஓட்டாமல், 2 மாடுகளோடு 3வது மாடாக வண்டியை ஓட்டும்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்று கருணாநிதி வேதனையோடு கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X