For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கராச்சாரியாருக்கு கருணாநிதி, ராமதாஸ் ஆதரவு : சுவாமி எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அயோத்தி பிரச்சனையில் சமரசம் காண காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைதிமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.

ஆனால், சுப்பிரமணியம் சுவாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அவர், பேச்சுவார்த்தை மூலம் முஸ்லீம்களுக்கும் விஸ்வ ஹிந்து பரிஷதுக்கும் இடையேஏற்படும் எந்தவிதமான ஒப்பந்தத்தையும் திமுக ஆதரிக்கும். சங்கராச்சாரியாரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது.

இந்தப் பிரச்சனையால் இனியும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான் என் கவலை.

பிரதமரின் கோரிக்கையின்படி இந்த முயற்சிகளில் சங்கராச்சாரியார் இறங்கியுள்ளார். நிச்சயம் அவரது முயற்சிகள்வெல்லும். கிட்டத்கதட்ட 75 சதவீதம் வெற்றி பெற்றுவிட்டதாகத் தான் நினைக்கிறேன்.

அயோத்தி விஷயத்தில் நான் சொன்னதை தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்.

வரும் சட்டசபைக் கூட்டத்தில் ஆளுநர் உரையின்போது பங்கேற்பதா இல்லையா என்று திமுக இன்னும் முடிவுசெய்யவில்லை என்றார் கருணாநிதி.

ராமதாசும் வரவேற்பு:

பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

அயோத்தி விவகாரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரின் பேச்சுவார்த்தையில் கிடைத்துள்ள தீர்வுக்கு காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி முட்டுக்கட்டை போடுவது கண்டனத்திற்குரியது.

அயோத்தி விவகாரம் இவ்வளவு தூரம் முற்றியதற்கு முழு காரணமே காங்கிரஸ் தான்.

இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு ஏற்பட்டால் அதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்கவேண்டும்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அதன் பிறகு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் ஆணைக்கு எல்லோரும்கட்டுப்பட வேண்டும் என்றார்.

சுவாமி எதிர்ப்பு:

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்சனை சட்டரீதியில் அனுகப்பட வேண்டிய ஒன்று. இதில்சங்கராச்சாரியாரை ஈடுபடுதுவது நியாயமல்ல. நாட்டின் அரசியல் சட்டம், மதசார்பின்மை, நீதி ஆகியவற்றுக்குஇதன் முலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சட்டம் பெரியதா, இல்லை ஒரு கும்பல் (பாபர் மசூதியை இடித்தவர்கள்) பெரியதா என்பது தான் கேள்வியே.

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கும் விஷய்ததில் ஏற்கனவே வி.எச்.பி. இரண்டு முறை தனது உறுதி மொழியில் இருந்து பின்வாங்கியுள்ளது. இப்போது அவர்களிடம் கோவில் கட்ட இடம் தருவது என்பது அங்கு வேறு எந்த கட்டடமும் கட்டமுடியாது என்பதாகத் தான் அர்த்தம்.

சட்டப்படி தங்களுக்கு முழு உரிமை கேட்க வேண்டிய இஸ்லாமிய அமைப்புகள் இந்த மதவாதிகளிடம்சரணடைந்தது கவலை தருகிறது.

இவ்வாறு சுவாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சுவாமிகளின் டெல்லி பயணம் நீட்டிப்பு:

இந் நிலையில் சங்கராச்சாரியார் தொடர்ந்து வி.எச்.பி. மற்றும் முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். இதற்காக தனது டெல்லி பயணத்தை மேலும் ஒரு நாள் அவர் நீட்டித்துள்ளார். தேவைப்பட்டால் மேலும்அவர் அங்கு தங்குவார் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X