For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

""கொள்ளை"" மாநகர் !!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள் தற்போது உச்சக்கட்டத்தைஎட்டியுள்ளன.

கடந்த சில மாதங்களாக சென்னையின் புறநகர்ப் பகுதிகளையே மையம் கொண்டிருந்த கொள்ளைக்காரர்கள்,படிப்படியாக முன்னேறி தற்போது சென்னையின் முக்கியப் பகுதிகளில் முகாமிட்டு கொள்ளையடித்துவருகின்றனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் பல போலீஸ்காரர்களின் வீடுகளும் தப்பவில்லை என்பதுதான் போலீசாரையேமிரள வைத்துள்ளது.

கடந்த வாரம் அடையாறில் உள்ள ஸ்டேட் வங்கியில் புகுந்த கும்பலைக் கொள்ளையடிக்க விடாமல் தடுத்துவிட்டபோதிலும், கொள்ளையர்கள் அங்கிருந்த கேஷியரான விஸ்வநாதனைக் கத்தியால் குத்திக் கொன்றதுதான்சென்னை மாநகர மக்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கி விட்டது.

இந்தக் கொலைதான் உச்சக்கட்டம் என்ற மக்களின் (மற்றும் போலீசாரின்) நினைப்பில் மண் விழுந்தது. இந்தச்சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் தினமும் கொள்ளை என்கிற ரீதியில் தற்போது நிலைமை மிகவும்மோசமாகி விட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த தமிழ்ப் புத்தாண்டுக்காக திருவான்மியூரைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர்,அதற்கு முன் தினம் இரவு பூ-பழம்-தேங்காய் போன்ற பொருட்களுடன் பணம்-நகை போன்றவற்றையும் படைத்துசாமி கும்பிட்டுள்ளார். அவ்வாறு படைப்பது அவர்களுடைய குடும்ப வழக்கம்.

ஆனால் விடிந்து எழுந்து அவருடைய குடும்பத்தினர் பார்த்தபோது, சாமிப் படங்களுக்கு முன்பிருந்தவற்றைமட்டுமில்லாமல், அருகிலிருந்த அறையில் உள்ள பீரோவையும் உடைத்து பணம்-நகை போன்றவற்றைக்கொள்ளையர்கள் "அடித்துக்" கொண்டு "கம்பி நீட்டி" விட்டனர்.

அதே நாள் எழும்பூரிலும் ஒரு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு நுழைந்த கொள்ளையர்கள், தங்களுடையகைவரிசையைக் காட்டியுள்ளனர்.

நேற்று முன் தினம் இரவும் எழும்பூர் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைமற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

லேட்டஸ்டாக இன்றும் தாம்பரம் மப்பேடு பகுதியில் உள்ள ஒரு அடகுக் கடையை உடைத்து 400 கிராம் தங்கநகைகளையும் 8 கிலோ வெள்ளிப் பொருட்களையும் மற்றும் பணத்தையும் ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது.

அதேபோல் திருவெற்றியூரிலும் ஒரு நகைக் கடை சூறையாடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் சுமார் 50 கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ள போதிலும், இன்னும் இவை தொடர்பாகஒருவர்கூடக் கைது செய்யப்படவில்லை என்பதுதான் ஹைலைட்.

இந்தியாவிலேயே சிறந்த போலீஸ் தமிழகத்திடம்தான் உள்ளது என்று மார்தட்டிக் கொள்கிறோம். தமிழகப்போலீசாரே உங்களுக்கா இந்த நிலை?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X