For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

30 அடி உயரத்திலிருந்து சொய்ய்ங்ங்... போலீஸ்காரர் உலக சாதனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேனி மாவட்டம் குச்சனூரைச் சேர்ந்த வேல்முருகன் என்ற போலீஸ்காரர் 30 அடி உயரத்திலிருந்து வயிறு கீழே படும்படியாககுதித்து உலக சாதனை படைத்துள்ளார்.

கோவை ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருப்பவர் வேல் முருகன். இவருக்கு சாதனைகள் புரிவதே பொழுதுபோக்காகும்.இதற்கு முன் 23 மணி நேரம் வைகை ஆற்றில் நீந்தி சாதனை படைத்திருக்கிறார்.

ஒற்றைக் காலில் 81 மணி நேரம் நின்றிருக்கிறார். உடற் பயிற்சிக் கருவியான டம்பிள்ஸை 27 ஆயிரம் தடவை தூக்கியிருக்கிறார்.இப்படி எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ள வேல்முருகனுக்கு உலக சாதனை படைக்கும் ஆர்வம் இருந்து வந்தது.

மேலிலிருந்து கீழே வயிற்றுப் பகுதி தரையில் படும் படியாக குதித்து உலக சாதனை படைக்க ஆசைப்பட்டார் வேல் முருகன்.இதற்கு முன்பு அமெக்காவின் பாடம்ஸ் என்பவர் இதுபோல 29 அடி 1 அங்குலம் உயரத்திலிருந்து குதித்து உலக சாதனைபடைத்துள்ளார்.

அதை முறியடிக்க விரும்பிய வேல்முருகன் அதற்காக கடும் பயிற்சி பெற்றார்.

அதன் பின்னர் சென்னையில் வியாழக்கிழமை இந்த சாதனையைப் படைத்தார். சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்தசாதனை குதிப்பு நடந்தது. நூற்றுக்கணக்கான போலீஸார் மற்றும் பத்திக்கையாளர்கள் குழுமியிருக்க கிரேன் மூலம் 30 அடிஉயரத்திற்குச் சென்றார் வேல் முருகன்.

பின்னர் தலையில் தேசியக் கொடியைக் கட்டிக் கொண்டு கைகளைஅகல வித்தபடி அங்கிருந்து குதித்தார் வேல் முருகன்.

சொய்ய்ய்ங்... என்று கீழே வந்த வேல்முருகனைப் பார்த்து போலீசார் கைதட்டி ஆராவாரம் செய்ய பத்திரிக்கையாளர்கள்மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கீழே வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்டிருந்த தொட்டியில் வயிற்றுப் பகுதி தொப்என்று தட்ட வந்து விழுந்தார்.

விழுந்த சில விநாடிகளில் அப்படியே மேலே எழுந்து கைகளை மேலே தூக்கிஆரவாரம் செய்தார். இந்த உலக சாதனையை நேரில்பார்த்த இணை கமிஷனர் ஜார்ஜ் வேல்முருகனைப் பாராட்டி கைகுலுக்கினார்.

அப்போது அங்கு வந்த மாநகர கமிஷனர் விஜயக்குமாரும் வேல்முருகனைப் பாராட்டி

அவருக்கு ரூ. 10,000 பரிசுத் தொகையை வழங்கினார்.

அடுத்து ஹெலிகாப்டலிருந்து நடுக் கடலில் குதித்து சாதனை செய்யப் போவதாக வேல்முருகன் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X