For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரிதி விவகாரம்: கருணாநிதி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம் வழுதிக்கு இந்தச் சட்டசபைக் கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுளளது குறித்து விவாதிக்க திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில்நடக்கிறது.

தகர டப்பா.. கிழிந்த ஜிப்பா..

நேற்று சட்டசபையில் நடந்த விவாதத்தில் கருணாநிதியை அமைச்சர் வளர்மதி மிக மோசமாக சாடினார். அவர் பேசுகையில்,எங்கள் தலைவி வெள்ளி ஸ்பூனுடன் பிறந்தவர். கிழிந்த ஜிப்பாவுடனும் தகர பெட்டியுடனுன் சென்னைக்கு வந்தவர் அல்லஎன்றார்.

இதை திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாகக் கண்டித்தனர். இதே மாதிரி நாங்களும் பேசினால் அதை அனுமதிப்பீர்களா என்றுசபாநாயர் காளிமுத்துவிடன் திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி கேட்டார்.

நாகரீகமாகப் பேசினால் அனுமதிப்பேன் என்றார் காளிமுத்து.

தொடர்ந்து பேசிய வளர்மதி, எங்கள் தலைவி எங்களுக்கு வரம் தருவதற்காக சிறை சென்றார். சிங்கம் போல வெளியே வந்தார்.ஆனால், ஒரு சிலரைப் போல (கருணாநிதி) சிறை வாசலில் குழந்தை, குட்டிகளுடன் உட்கார்ந்து அழுது அடம் பிடித்துஅசிங்கப்படுத்தவில்லை என்றார்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அவர்களைப் பேச விடாமல் அதிமுகவினர் கூச்சல்போட்டனர். இதையடுத்து திமுகவினரும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.

நீ... வா.... போயா...

இரு தரப்பினரும் நீ.. வா... போன்று ஒருமையில் திட்டிக் கொண்டனர். பரிதி இளம்வழுதி அமைச்சர் வளர்மதியைப் பார்த்து ஏதோமிகக் கோபமாகத் திட்டினார்.

திமுக உறுப்பினர் பொன்முடி பேசுகையில், உங்கள் தலைவியை புகழ்ந்துவிட்டுப் போங்கள். ஆனால், எங்கள் தலைவரைஇகழ்வதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பன்னீர்செல்வம், யாரையோ சொன்னால் அதை ஏன் உங்களைச் சொல்வதாக நினைக்கிறீர்கள்.மூளி என்று சொன்னால் நீங்கள் ஏன் உங்கள் காதுகளைத் தொட்டுப் பார்க்கிறீர்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய வளர்மதி, திமுக தலைவர் கருணாநிதியை மிகவும் தரக் குறைவாகப் பேசினார். அவரைப் பேச அனுமதித்தசபாநாயகருக்கு எதிராக பரிதியும் பொன்முடியும் தொடர்ந்து குரல் எழுப்பினர்.

என்கிட்ட மோதாதே...

அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, பரிதி என்னை சீண்டிப் பார்க்காதீர்கள். நான் சீண்டினால் உங்களுக்கும் உங்களைச்சார்ந்தவர்களுக்கும் தூக்கமே வராது. என் தலைமைக்குக் கட்டுப்படும், இந்த பதவிக்கான மரியாதைக்குக் கட்டுப்பட்டும் நான்அமைதியாக இருக்கிறேன். எனவே என்னை சீண்ட வேண்டாம் என்றார்.

காளிமுத்து இப்படிக் கூறிய பின்னர் பரிதி இன்னும் அதிகமாகவே அவரை எதிர்த்துக் கோஷமிட்டார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்னையன் காதில் முதல்வர் ஜெயலலிதா ஏதோ கூற அவர் எழுந்து பரிதியை கூட்டத் தொடர்முழுவதும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து பரிதியை அவைக் காவலர்கள் கெஞ்சிக் கூத்தாடிவெளியில் அழைத்துச் சென்றனர்.

திமுக வெளிநடப்பு:

ஆனால், பரிதி விடவில்லை. சபைக்கு வெளியே லாபியில் நின்று உரத்த குரலில் சபாநாயகரையும் அதிமுகவினரையும் எதிர்த்துக்குரல் தந்தார். இதையடுத்து அவரை லாபியை விட்டும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையை விட்டு வெளியேறினர். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்திருமாவளவனும் சபாநயகரைக் கண்டித்து வெளிநடப்பு செய்தார்.

வெளியே நிருபர்களிடம் பேசிய பரிதி, நான் பேச ஆரம்பித்தாலே மைக்கை ஆப் செய்துவிடுகிறார் சபாநாயகர். நான் பேசஉரிமையில்லையா? என்னைப் பார்த்து போயா.. வாயா என்று பேசிகிறார். இது மாதிரி ஒரு கேடுகெட்ட சபாநாயகரை எங்கும்பார்க்க முடியாது. என்னை சீண்டிப் பார்க்காதே என்கிறார். அது என்ன மறப்போர் மன்றமா? என்றார் பரிதி.

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்:

பரிதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிக்க திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடக்கிறது.

திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் அனைத்துஎம்.எல்.ஏக்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X