For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளஸ் டூ: சாதனை மாணவர் கோமாவில் !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை :

பிளஸ் டூ தேர்வில் 4 பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர் இந்த மகிழ்ச்சிகரமானசெய்தியைக் கேட்கக் கூட முடியாமல் நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ளார்.

சென்னை ஸ்ரீ அஹோபிலமடம் ஓரியண்ட்டல் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கே.ஈ.டி. கேசவன், தற்போது நடந்தபிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் புள்ளியியல் பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள்பெற்றுள்ளார்.

இவை தவிர சமஸ்கிருதத்தில் 199 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 186 மதிப்பெண்களும் பெற்று மொத்தம் 1185மதிப்பெண்கள் பெற்றுள்ளார் கேசவன்.

அருமையாகப் படித்து பிளஸ் டூ தேர்வையும் வெற்றிகரமாக எழுதி முடித்த நிலையில், தேர்வுகள் முடிந்த சிலநாட்களிலேயே திடீரென்று மயங்கி விழுந்தார். இதைக் கண்டு பதறிப் போன பெற்றோர்கள், கேசவனைஉடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருடைய மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒன்பது நாள் முழுக்கமுழுக்க கோமாவிலிருந்த கேசவன் பின்னர் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சமீபத்தில் ஆபரேஷன் நடந்தது. ஆனாலும் இன்னும் முழுமையாக அவர் குணமடையவில்லை.

இந்த நோய் காரணமாக கேசவனால் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வைக் கூடஎழுத முடியவில்லை. அப்போதும் அவர் கோமாவில் தான் இருந்துள்ளார்.

எப்போதாவது மட்டும் அவருக்கு நினைவு திரும்புமாம். அப்போது கூட "அங்கிள்" "அங்கிள்" என்றுதான்அழைத்துக் கொண்டிருந்தாராம். சில வேளைகளில் மட்டுமே அவருடைய பெற்றோரை அடையாளம் கண்டுகொள்கிறார் கேசவன்.

நேற்று அவர் எடுத்துள்ள மதிப்பெண்களைப் பற்றிக் கூறியபோது கூட கேசவனிடமிருந்து எந்தவிதமானரியாக்ஷனும் வரவில்லை.

கேசவனுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமையான வியாதியைக் கண்டு அவருடைய குடும்பத்தினரும்நண்பர்களும் மிகவும் கலங்கிப் போயுள்ளனர்.

எங்களுக்கு அவன் ஒரே பையன். பெரிய என்ஜினியராகி குடும்பத்தை நன்றாக வைத்துக் கொள்ளப் போவதாகக்கூறிக் கொண்டிருந்தான். ஆனால் இப்படி நுழைவுத் தேர்வு எழுதக் கூட முடியாமல் அவனால் போய் விட்டதேஎன்று கேசவனின் பெற்றோர் கதறுகின்றனர்.

கேசவனுடைய மருத்துவச் செலவுகளைக் கவனித்துக் கொள்வதற்கும் அவனுடைய எண்ணங்களைநிறைவேற்றுவதற்கும் அவன் உடல் நலம் தேறிய பின்னர் என்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கும்முதல்வர் ஜெயலலிதா தான் உதவி செய்ய வேண்டும் என்று கேசவனின் தாயார் ராஜலட்சுமி கோரிக்கைவைத்துள்ளார்.

இந்த மாணவனுக்கு கருணை அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா உதவிட வேண்டும். இது தமிழக அரசின்கடமையும் கூட.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X