கோவை வியாபாரிக்கு கத்திக் குத்து: ரூ.3 லட்சம் நகை பறிப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வியாபாரியை மோட்டார் சைக்கிள்களில் வந்த 6பேர் கொண்ட ஒரு கும்பல் கத்தியால் குத்தி அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளைப் பறித்துச் சென்றது.
அந்த வியாபாரி கையில் சூட்கேசுடன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சில மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் அவரை வழிமறித்து அவர் வைத்திருந்த சூட்கேசைப்பறிக்க முயன்றனர்.
ஆனால் அவர் சூட்கேசை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இதையடுத்து அந்தக் கும்பல் அந்தவியாபாரியின் வயிற்றில் சராமாரியாகக் கத்தியால் குத்தியது.
கத்திக் குத்து வாங்கிய அந்த வியாபாரி ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரியவே அந்தக் கும்பல் அவருடையசூட்கேசை எடுத்தக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.
காயமடைந்த வியாபாரி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
கொள்ளைக் கும்பலால் பறித்துச் செல்லப்பட்ட அவருடைய சூட்கேசில் 750 கிராம் தங்க நகைகளும் ரூ.5,000பணமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் என்றும் தெரிகிறது.
இது குறித்து கோயம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆறு கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications