For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகள் வேலை நிறுத்தம்: தமிழர் பகுதிகள் செயல் இழந்தன

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப் புலிகள் நேற்று அழைப்பு விடுத்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தமிழர் பகுதிகளில் முழு ஆதரவுஇருந்தது. யாழ்பாணத்திலும், மட்டக் களப்பிலும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

அமைதி ஒப்பந்தத்தில் கொடுத்துள்ள உறுதிமொழிகளை இலங்கை அரசு நிறைவேற்றாமல் இருந்து வருவதைக்கண்டித்தும் யாழ்பாணத்தில் ராணுவத்தின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதை எதிர்த்தும் இந்தப் போராத்தைபுலிகள் நடத்தினர்.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை மூடப்பட்டிருந்தன.யாழ்பாணநெடுஞ்சாலைக்கு புலிகள் சீல் வைத்தனர். இதனால் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ஒப்பந்தம் கையெழுத்தன 30 நாட்களுக்குள் தமிழர் பகுதிகளில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் இருந்துராணுவம் வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், வட-கிழக்குப் பகுதியில் 139 வழிபாட்டுத் தலங்களிலும், 74பள்ளிகளிலும், 113 அரசுக் கட்டடங்களிலும் ராணுவம் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர வடமராச்சி பகுதியில் புதிய ராணுவ முகாமையும் இலங்கை அரசு அமைத்து வருகிறது.

அதே போல வட-கிழக்கு இலஙகையின் கடற் பகுதிகளில் தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்கவும் பலவிதமான தடைகள்தொடர்ந்து கொண்டுள்ளன. இதனால் புலிகள் அழைப்பு விடுத்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பெரும்அளவிலான மீனவர்களும் கலந்து கொண்டனர்.

தீவுகளுக்கு செல்ல புலிகளுக்கு அனுமதி:

இந் நிலையில் யாழ்பணத்தை ஒட்டியுள்ள சிறிய தீவுகளுக்குச் செல்ல புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைஇலங்கை அரசு நேற்று நீக்கியது. தீவுகளுக்குள் ஆயுதங்களையோ, போர் உடையிலோ வரக் கூடாது என்றுபுலிகளுக்கு கடற்படை தடை விதித்திருந்தது.

இதை புலிகள் மிகக் கடுமையாக எதிர்த்து வந்தனர். இந்தத் தீவுகளில் உள்ள தங்கள் உறவினர்களைச் சந்திக்கதங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி வந்தனர்.

இப்போது புலிகள் இந்தத் தீவுகளுக்குச் செல்ல இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ராணுவமுகாம்களுக்கு அருகில் செல்லக் கூடாது என்று மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்சனை தீரும்: ரணில்

இதற்கிடையே நேற்று இந்தியாவிலிருந்து கொழும்பு திரும்பும் முன் சென்னையில் நிருபர்களிடம் பேசியஇலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, வட கிழக்குப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீதான கட்டுப்பாடுகளைநீக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X