For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

""ஒரு பழைய சர்ச்சில் தான் இந்தியாவின் முதல் ராக்கெட் உருவானது"": கலாம் தகவல்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் அப்துல் கலாம்திருச்சியில் தான் படித்த புனித ஜோசப் கல்லூரிக்குச் சென்றார்.

நேற்று மாலை அவருடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்குச் சென்றிருந்த கலாம் இன்று காலை திருச்சிக்குவந்தார். அவர் படித்த புனித ஜோசப் கல்லூரிக்குச் சென்ற போது அவருக்குச் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.

1950-54ல் இந்தக் கல்லூரியில் பி.எஸ்சி. படிப்பை முடித்தார் கலாம். அப்போது அவருடைய ஆசிரியராக இருந்தபாதர் சின்ன துரைக்கு தற்போது 90 வயது கடந்து விட்ட போதிலும் கலாமைப் பார்ப்பதற்காக சுமார் 190 கி.மீ.தூரத்திலிருந்து இன்று திருச்சிக்கு வந்து அவரை வாழ்த்தினார்.

பின்னர் மாணவர்களிடையே கலாம் பேசியதாவது:

கடந்த 1962ம் ஆண்டில் கேரளாவில் உள்ள தும்பாவில் ஒரு சர்ச்சில் வைத்து தான் இந்தியாவின் முதல் ராக்கெட்டைவடிவமைப்பதைக் குறித்து நான் கற்றுக் கொண்டேன்.

அப்போது இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை நிறுவுவதற்காக டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தியாமுழுவதும் பிரம்மாண்டமான, பொருத்தமான ஒரு இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது தான் தும்பாஅவருடைய கண்ணில் பட்டது.

ஆனால் அந்தச் சமயத்தில் அங்கு ஒரு புனித மேரி சர்ச், ஒரு கிராமப் பள்ளி, ஒரு சர்ச் பாதரின் வீடு மற்றும்மீனவர்களின் குடிசைகள் ஆகியவை தான் இருந்தன.

கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள அந்த இடத்தில் விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பது தான் சரியாகஇருக்கும் என்று சாராபாய் நினைத்தார். ஆனால் அந்த இடத்தை அவர்களிடமிருந்து பெறுவதில் பெரிதும் சிரமம்ஏற்பட்டது. அங்கிருந்த உள்ளூர் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் கூட இதற்குக் கடுமையாக எதிர்ப்புதெரிவித்தனர்.

இதையடுத்து என்ன செய்வது என்று சாராபாய் யோசித்துக் கொண்டிருந்த போது தான் அங்குள்ள சர்ச்சின் பாதரைஅணுகினால் பிரச்சனை சுமூகமாக முடியும் என்பதைத் தெரிந்து கொண்டார். பீட்டர் பெரேரா என்ற அந்த பாதரைச்சந்தித்துப் பேசி விண்வெளி ஆய்வு மையத்தின் முக்கியத்துவத்தைத் தெளிவாக எடுத்துக் கூறினார் சாராபாய்.

பாதரும் அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் கூறவே, 400 ஏக்கர் நிலத்தை விண்வெளிமையம் அமைப்பதற்காகத் தந்து விட்டனர் அப்பகுதி மக்கள்.

அப்போது அங்கிருந்த ஒரு பழைய சர்ச்சில் அமர்ந்து கொண்டு தான் சாராபாய், நான் உள்ளிட்ட வேறு சிலவிஞ்ஞானிகள் சேர்ந்து இந்தியாவில் முதல் ராக்கெட்டை வடிவமைத்தோம் என்று இந்தியாவின் ராக்கெட்தொழில்நுட்பம் வளர்ந்த உண்மைக் கதையை மெய்சிலிர்க்கக் கூறினார் கலாம்.

முன்னதாக புனித ஜோசப் கல்லூரியின் என்.சி.சி. மாணவர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கலாம், தான் பயின்ற இயற்பியல் துறை வகுப்பறைகளையும் ஆய்வகங்களையும் விடுதியையும் சென்றுபார்வையிட்டார்.

பின்னர் அங்குள்ள வரலாற்றுப் புகழ்மிக்க புனித லூர்து சர்ச்சுக்கும் சென்றார் கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X