For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையை கலக்கிய மதம் பிடித்த யானை: வாகனங்களை தூக்கி எறிந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் பசியின் கொடுமையால் மதம் பிடித்து சாலையில் ஓடிய யானை ஜீப், வேன் போன்ற வாகனங்களைமிதித்து நொறுக்கி துவம்சம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

சென்னை-வடபழனியில் தனியாருக்குச் சொந்தமான "வஜீலா" என்ற யானை உள்ளது. இந்த யானையின் பாகன்ஜார்ஜ் அந்த யானையைக் கட்டிப் போட்டு விட்டு நேற்று சாப்பிடச் சென்று விட்டார்.

அப்போது திடீரென்று பயங்கரமாகப் பிளிறிய யானை கட்டுக்களை எல்லாம் அவிழ்த்துக் கொண்டு சாலையில்இறங்கி ஓட ஆரம்பித்தது.

இதனால் அப்பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் தலைதெறிக்க சிதறி ஓட ஆரம்பித்தனர். அந்தயானைக்கு மதம் தான் பிடித்து விட்டது என்று கருதிய அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் பயந்து போய் தங்கள்வீட்டின் மாடிகளுக்குச் சென்று நின்று கொண்டனர்.

இதற்கிடையே சாலையில் தாறுமாறாக ஓடிய யானை அப்பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்புக்குள் புகுந்துஅங்கிருந்த ஒரு ஜீப் மற்றும் ஒரு வேனை பயங்கரமாகத் தாக்கி மிதிக்க ஆரம்பித்தது.

இதில் அந்த இரண்டு வாகனங்களும் அப்பளம் போல் நொறுங்கி நசுங்கி விட்டன.

இதற்கிடையே அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுக்கவே, வனத்துறை அதிகாரிகளுடன் போலீசார்அப்பகுதிக்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் யானைக்கு வாழைப்பழம், தென்னை மர ஓலைகள் ஆகியவற்றைச்சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்த யானையும் அவற்றைச் சாப்பிட்டு விட்டு அமைதியாக இருந்தது.

பசியின் காரணமாகவே இத்தனை அமளி துமளிகளையும் அந்த யானை செய்து விட்டது என்று பின்னர் தெரியவந்தது.

இருந்தாலும் வனத்துறை அதிகாரிகள் அந்த யானையையும் அதன் பாகனையும் கிண்டி சிறுவர் பூங்காவிற்குக்கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

யானையைக் கட்டிப் போட்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் யானையிடம் வம்பு செய்ததாகவும் அதனால்தான் யானை கோபமடைந்து கட்டுக்களை அறுத்துக் கொண்டு அட்டகாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வடபழனி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X