For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று ஜனாதிபதியாகிறார் கலாம்: டெல்லி வந்த ராமேஸ்வரம் நண்பர்கள்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியாவின் 12வது ஜனாதிபதியாக பிரபல அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் அப்துல் கலாம் நாளைபதவியேற்க உள்ளார்.

கடந்த 15ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் கடந்த 18ம் தேதி அறிவிக்கப்பட்டன. இடதுசாரிகம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கேப்டன் லட்சுமி சேகல்லை 85 சதவீத வாக்குகள்பெற்று தோற்கடித்தார் டாக்டர் கலாம்.

இந்நிலையில் நாளை (ஜூலை 25) காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இந்தியாவின் புதியஜனாதிபதியாக டாக்டர் கலாம் பதவியேற்கிறார்.

டாக்டர் கலாமுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என். கிர்பால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி,காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, எம்.பிக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் குறிப்பாக விஞ்ஞானிகள்ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் தமிழகத்திலிருந்து 100 பள்ளிக் குழந்தைகளும் டாக்டர் கலாமின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கின்றனர்.

ஜனாதிபதியுடன் தங்க மாட்டேன்: அண்ணன்:

இதற்கிடையே இவர்களை எல்லாம் தவிர டாக்டர் கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயர் உள்ளிட்ட 38உறவினர்கள் மற்றும் நண்பர்களும் நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

கடந்த திங்கள்கிழமை மாலை சென்னையிலிருந்து ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்ட இந்த 38 பேரும் இன்றுஅதிகாலை டெல்லி வந்தடைந்தனர்.

வழி நெடுகிலும் உள்ள பல ரயில் நிலையங்களில் கூடியிருந்த மக்களும், அதே ரயிலில் சென்ற சக பயணிகளும்கலாம் உறவினர்-நண்பர்களை அன்புடன் சந்தித்து உரையாடியதோடு நில்லாமல், கலாமுக்குத் தங்களுடையவாழ்த்துக்களையும் தெரிவிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொண்டனர்.

கலாம் கேட்டுக் கொண்டாலும் கூட நாங்கள் ஜனாதிபதி மாளிகையில் தங்க மாட்டோம். மேலும் பதவியேற்புவிழாவுக்கு மறுநாளே நாங்கள் ராமேஸ்வரத்துக்குக் கிளம்பி விடுவோம் என்று டெல்லி ரயில் நிலையத்தில் முத்துமீரான் மரைக்காயர் கூறினார்.

மேலும் ஜனாதிபதி என்பதற்காகத் தங்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று கலாமிடம் நாங்கள் கேட்கமாட்டோம். எங்களை விட அவர் நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று தான் விரும்புகிறோம் என்றுமரைக்காயர் மட்டுமல்லாமல் அவருடன் வந்திருந்த அனைவருமே கூறினர்.

கலாமின் நண்பரான ராமேஸ்வரம் கோவிலின் பூசாரி வெங்கட சுப்பிரமணிய சாஸ்திரிகள் உள்ளிட்ட கலாமின்இளமைக் கால நண்பர்களும் டெல்லி வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்காக எந்தவிதமான சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து தரக் கூடாது என அதிகாரிகளிடம் கலாம்கூறிவிட்டார். இவர்கள் ரயில் மூலம் டெல்லி வந்து செல்வதற்கு அனைத்து செலவுகளையும் கலாமே ஏற்றுக்கொண்டுள்ளார்.

கலாமுக்கு செயலாளர் நியமனம்:

பாதுகாப்புத் துறையின் உற்பத்திப் பிரிவு செயலாளரான பி. மாதவன் நாயர் என்பவர் டாக்டர் கலாமின்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாமின் செயலாளராக மத்திய அரசு சில பெயர்களைப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் பாதுகாப்புத்துறையைச்சேர்ந்த ஒருவர் தான் தனக்குச் செயலாளராக வேண்டும் என்று டாக்டர் கலாமே கேட்டு மாதவன் நாயரைப் பெற்றுக்கொண்டார்.

இன்றுடன் பதவிக் காலம் முடியும் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனிடம் செயலாளராக இருந்த கோபால் கிருஷ்ணகாந்தி இலங்கை தூதராக அனுப்பப்பட்ட பிறகு செயலாளரே இல்லாமல் இருந்தார் நாராயணன் என்பதுகுறிப்பிடத்தக்கது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X