ரேடியோ கேட்டு நீதிமன்றத்தில் வைகோ வழக்கு
சென்னை:
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனக்கு ரேடியோவைத்துக் கொள்ள அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டது முதல் அவர் கோரிக்கையை வைத்து வருகிறார். ஆனால், மாநில அரசு அனுமதி தர மறுத்து வருகிறது.அவருக்கு ஒரு தமிழ் பத்திரிக்கையும் ஒரு ஆங்கில பத்திரிக்கையும் மட்டுமே தரப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் உயர் நீதிமன்றத்தில் அவர் ரேடியோ வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் அவர்கூறியிருப்பதாவது:
நான் கடந் 19ம் தேதி ரேடியோ பயன்படுத்த அனுமதிக்குமாறு சிறைத்துறை டி.ஐ.ஜிக்கு கடிதம் எழுதினேன். வேலூர் சிறைக்கண்காணிப்பாளர் மூலம் இந்த கோரிக்யைை அனுப்பினேன். ஆனால். அதற்கு இதுவரை பதிலே இல்லை.
விசாரைணக் கைதிகள் எழுதவும், படிக்கவும், பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடவும் உரிமை உண்டு. பூந்தமல்லி சிறையில் டிவி கூடவைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. எனக்கு டிவி எல்லாம் வேண்டாம். ரேடியோ வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் எம்.பியாகவும் உள்ள எனக்கு நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள உரிமை உண்டு. அதற்காகத்தான் ரேடியோ கேட்கிறேன். ரேடியோ தடை செய்யப்பட்ட சாதனம் அல்ல. எனவே ரேடியோ வைத்துக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும் என்று அதில் வைகோ கூறியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
அடுத்த கட்ட போராட்டம்: இன்று ஆலோசனை
இதற்கிடையே வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்க மதிமுகவின்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் கூடுகிறது.
இது குறித்து அக் கட்சியின் மத்தியின் அமைச்சர் கண்ணப்பன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் இருவரும் சிறையில் வைகோவை நேற்றுசந்தித்துப் பேசினர். பின்னர் கண்ணப்பன் நிருபர்களிடம் பேசுகையில்,
சனிக்கிழமை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து வைகோவிடம் பேசியுள்ளோம். மாநிலம்முழுவதும் கண்டனக் கூட்டம் நடத்தவும திட்டமிட்டுள்ளோ என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications