குஜராத் விவகாரம்: நீதிமன்றத்தை அணுக கலாம் அனுமதி
டெல்லி:
குஜராத்தில் தேர்தலை ஒத்தி வைத்துவிட்ட தேர்தல் கமிஷனின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட மத்தியஅரசுக்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒப்புதல் அளித்துள்ளார்.
குஜராத்தில் இன்னும் சகஜநிலை திரும்பவில்லை என்பதால் அங்கு இப்போதைக்குத் தேர்தல் நடத்த முடியாது என்றுதேர்தல் கமிஷன் கூறியதோடு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும்பரிந்துரைத்துள்ளது.
இதனால் ஆளும் பா.ஜ.க. அரசு அதிர்ச்சி அடைந்தது. தேர்தல் கமிஷன் தன்னுடைய வரம்புகளை மீறிச்செயல்படுவதாக துணைப் பிரதமர் அத்வானி குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியமத்திய அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி ஒரு புகார் கடிதத்தை நேற்று டாக்டர் கலாமிடமும் மத்திய அரசுசமர்ப்பித்தது.
இந்நிலையில் அந்தக் கடிதத்திற்கு டாக்டர் கலாம் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இன்று காலை இங்கிலாந்து செல்வதற்காகக் கிளம்பிய அத்வானி டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம்இதைத் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரைக்க முடியுமாஎன்பது தான் முக்கிய பிரச்சனையாகியுள்ளது. அங்கு நரேந்திர மோடியின் ஆட்சியை நீக்கிவிட்டு ஜனாதிபதிஆட்சியை அமலாக்க மத்திய அரசு விரும்பவில்லை. ஆனால், மோடியை வைத்துக் கொண்டு அங்கு தேர்தல்நடத்த முடியாது என தேர்தல் கமிஷன் நினைக்கிறது.
இது அரசியல் சட்டரீதியிலான பிரச்சனை என்பதால் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறிய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதையடுத்து டாக்டர் கலாமின் ஒப்புதல் பெறப்பட்ட அந்தக் கடிதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.கிர்பாலிடம் அளிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து முடிவெடுக்க அரசியல் சட்ட பெஞ்ச் ஒன்றைஇனிமேல் தான் நீதிபதி கிர்பால் அமைக்கவுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications