ரகுபதியின் வங்கி லாக்கர்களில் லஞ்ச-ஒழிப்பு போலீசார் சோதனை
புதுக்கோட்டை:
முன்னாள் அதிமுக அமைச்சர் ரகுபதியின் வீட்டில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்துநேற்று அவருடைய வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவிவகித்த ரகுபதி கடந்த 2000ம் ஆண்டு திமுகவுக்குத் தாவினார்.
கடந்த சனிக்கிழமை முன்னாள் திமுக அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் ஜெனிபர் சந்திரன் மற்றும்காங்கிரஸ் பேரவை எம்.எல்.ஏ. ரங்கநாதன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில்ரகுபதியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின் போது ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றுடன் வெளிநாடுகளிலிருந்து பணம் வந்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றையும் போலீசார்கைப்பற்றினர்.
இந்நிலையில் ரகுபதியின் வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். இந்தலாக்கர்களில் அவருடைய பெயரிலும் அவர் குடும்பத்தினரின் பெயர்களிலும் வைக்கப்பட்டுள்ள நகைகளின்விவரம் குறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
இங்கு பல மணி நேரம் சோதனை நடந்தது. சோதனையின் போது ரகுபதியின் மனைவி சரோஜாவும் மகள்கவிதாவும் உடன் இருந்தனர்.
வீட்டில் 2வது நாளாக சோதனை:
முன்னதாக ரகுபதியின் புதுக்கோட்டை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று 2வது நாளாக சோதனைநடத்தினர்.
சோதனை நடந்து கொண்டிருந்த போது ரகுபதி வீட்டில் இல்லை. புதுக்கோட்டையில் திமுகவினர் நடத்தியகண்டனப் பேரணியில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றிருந்தார்.
இருந்தாலும் ரகுபதிக்காகக் காத்திருக்காமல் போலீசார் தொடர்ந்து அங்கு சோதனை மேற்கொண்டனர்.
இதற்கிடையே கடந்த சனிக்கிழமை அவருடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நேற்று புதுக்கோட்டைநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications