மத்திய அமைச்சர் ராஜினாமா: பால் தாக்கரே நடவடிக்கை
டெல்லி:
சிவசேனை கட்சியின் தலைவர் பால்தாக்கரேயின் உத்தரவுப்படி மத்திய மின் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியைராஜினாமா செய்துவிட்டார்.
மத்திய மின்துறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வந்தவர் சுரேஷ் பிரபு. மத்திய அமைச்சர்களில் ஜஸ்வந்த் சிங்குக்குஅடுத்தபடியாக மிகத் திறமையான செயல்பாடு கொண்டவர் என்ற பெயர் வாங்கினார்.
மின்துறையில் தனியார் மயம், இலவச மின்சாரம் ரத்து, இலவச மின்சாரம் தரும் மாநில அரசுகளுக்கு சலுகை ரத்து, மின் திருட்டுதடுப்பு, மின் வினியோகத்தையும் தனியார்மயமாக்குவது போன்ற திட்டங்களால் அந்தத் துறையை ஒட்டுமொத்தமாக மாற்றிஅமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அதிகாரிகளுக்கு இணையாக அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்.
சிவசேனையைச் சேர்ந்த இவருக்கும் அவரது கட்சியின் தலைவர் பால் தாக்கரேவுக்கும் இடையே சில காலமாகவே நல்லுறவுஇல்லை. தனது துறையின் திட்டங்கள் குறித்து தன்னிடம் பிரபு விவாதிப்பதில்லை என்று தாக்கரே எரிச்சலில் இருந்ததாகக்கூறப்படுகிறது.
இதனால் பதவியை ராஜினாமா செய்யுமாறு பிரபுவுக்கு தாக்கரே உத்தரவிட்டார். இதையடுத்து பிரபு தனது ராஜினாமா கடிதத்தைபிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்பும் இதே போல பிரபுவை தாக்கரே ராஜினாமா செய்யச் சொன்னார். ஆனால், இருவருக்கும் இடையேசமரசம் ஏற்பட்டதையடுத்து தனது முடிவை தாக்கரே மாற்றிக் கொண்டார்.
இப்போது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்ட பிரபு நிருபர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
அவரது பதவியை சிவசேனையைச் சேர்ந்த ஆனந்த் கீதேவுக்குத் தர தாக்கரே முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கீதே இப்போதுமத்தியில் இணையமைச்சராக உள்ளார். கீதே காரணமாகத்தான் தாக்கரேவுக்கும் சுரேஷ் பிரபுவுக்கும் இடையே பிரச்சனையேவந்ததாகத் தெரிகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications