For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணமா? தேசமா?: இந்திய வீரர்கள்- ஐ.சி.சி. மோதல் முற்றுகிறது

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐ.சி.சி.) ஒப்பந்தம் செய்ய மறுத்துள்ள சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர்,ராகுல் டிராவிட் உள்ளிட்ட முக்கிய வீரர்களையும் நீக்கி விட்டு 25 வீரர்கள் கொண்ட புதிய பட்டியலை இந்தியகிரிக்கெட் வாரியம் தயாரித்துள்ளது.

இலங்கையில் ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபிக்கான கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் துவங்குகின்றன.

இதையடுத்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.சி.சி. ஒரு புதிய தடையை விதித்துள்ளது. இந்தப் போட்டிகள்துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவும், போட்டிகள் நடந்து முடிந்த பின்னர் ஒரு மாதமும் ஐ.சி.சி. கூறும்விளம்பரங்களில் மட்டும் தான் கிரிக்கெட் வீரர்கள் நடிக்க வர வேண்டும் என்று ஐ.சி.சி. கூறியுள்ளது.

இந்த கால கட்டத்தில் வேறு எந்த விளம்பரத்திலும் கிரிக்கெட் வீரர்கள் தோன்றக் கூடாது என்றும் ஐ.சி.சியின்லோகோவைத் தவிர வேறு எந்த நிறுவனத்தின் விளம்புரச் சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சியின் இந்தத் தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) ஏற்றுக் கொண்டுவிட்டது. இந்தத் தடையைகடைபிடிக்க வேண்டும் எனவும் இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. உத்தரவிட்டது.

ஆனால் கங்குலி, டெண்டுல்கர், டிராவிட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் ஐ.சி.சியின் இந்தப் புதியகட்டுப்பாட்டுக்கு உட்பட மறுத்து விட்டனர். இந்தத் தடையால் தங்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும்என்பதால் ஐ.சி.சியின் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட அவர்கள் மறுத்து வருகின்றனர்.

Robin Singhஇந்தியாவின் முன்னணி வீரர்கள் அனைவரும் சாம்சங் நிறுவனத்தின் பல்வேறு எலெக்ட்ரானிக் சாதனங்களுக்குமாடல்களாக உள்ளனர்.

இது தவிர ஒவ்வொரு முன்னணி வீரரும் பெப்சி, கோக், ஹீரோ ஹோண்டா போன்ற பலவித பொருள்களுக்குமாடல்களாக உள்ளனர். இது தொடர்பாக பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தமும் செய்து கொண்டு கோடிக்கணக்கில்பணமும் வாங்கியுள்ளனர்.

இந் நிலையில் தாங்ளை ஸ்பான்சர் செய்துள்ள நிறுவனங்களின் விளம்பரச் சின்னங்களை அணிவதையோ,ஆடைகளை உடுத்துவதையோ தடுக்கும் ஐ.சி.சியின் முடிவுக்கு வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், வீரர்கள் முதலில் நாட்டுக்காக விளையாட வேண்டும். அதைவிட்டுவிட்டு விளம்பரம் மூலம் காசுசம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ. தலைவர் டால்மியா கூறியுள்ளார்.

ஆனால், ஐ.சி.சியே காசுக்காகத் தானே பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதனால், நாங்கள்பணம் சம்பாதிப்பதை கேள்வி கேட்கும் உரிமை ஐ.சி.சிக்கு இல்லை என இந்திய வீரர்கள் கூறுகின்றனர்.

மேலும் இன்னொரு விவகாரத்தையும இந்திய வீரர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கிரிக்கெட் வீரர்களை அந் நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் வேலைக்குஅமர்த்தி மாதந்தோறும் ஊதியம் தந்துவிடுகின்றன. வீரர்கள் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் மாதஊதியம் நிச்சயம் கிடைத்துவிடும்.

Sourav Gangulyஆனால், இந்தியாவில் வீரர்கள் வெறும் காண்ட்ராக்ட் அடிப்படையில் தான் பி.சி.சி.ஐயிடம் வேலை பார்க்கும் நிலைஉள்ளது. இதனால் விளையாடினால் சம்பளம், விளையாடாவிட்டால் காசு கிடையாது என்ற நிலை உள்ளது.

நாங்கள் பிழைப்பதே இந்த விளம்பரங்களை வைத்துத் தான். இதையும் தவிர்த்துவிட்டு ஓட்டாண்டிகளாக அலையநாங்கள் தயாராக இல்லை என்பது கங்குலி- டெண்டுல்கர் தரப்பினரில் வாதமாக உள்ளது.

ஆனால், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ. அவர்களை விடுவதாக இல்லை. ஐ.சி.சியின்ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாவிட்டால் முக்கிய வீரர்களைத் தவிர்த்துவிட்டு பி டீம் எனப்படும் ரிசர்வ்ஆட்டக்காரர்களைக் கொண்ட அணியை உருவாக்கி அது தான் இந்திய அணி என அறிவித்துவிடுவோம் என பி.சி.சி.ஐ. மிரட்டிவருகிறது. அவர்களையே இலங்கை போட்டிக்கும் அனுப்பி வைப்போம் என்றும் கூறியுள்ளது.

ஐ.சி.சியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அதன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேற்று நண்பகல் 12 மணி வரைஇந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு வாரியம் அவகாசம் அளித்தது. இந்த கால அவகாசம் இன்றும்நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய வீரர்கள் பட்டியல்:

இந் நிலையில் கங்குலி, டெண்டுல்கர், டிராவிட் உள்ளிட்ட முக்கிய வீரர்களைத் தவிர்த்து விட்டு 25 வீரர்கள்அடங்கிய புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின்தலைவர் ஜக்மோகன் டால்மியாமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளில் இந்தப் புதிய பட்டியலில்உள்ள வீரர்கள் தான் விளையாடுவார்கள் என்றும் டால்மியா நேற்று பெங்களூரில் கூறினார்.

Sachin Tendulkarஇருந்தாலும் தற்போது இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய வீரர்களின் கவனம் பாதிக்கப்படாமல்இருப்பதற்காக அடுத்த மூன்று முதல் நான்கு நாட்கள் வரை இந்தப் பட்டியலை வெளியிடப் போவதில்லை என்றும்டால்மியா தெரிவித்தார் (இந்திய-இங்கிலாந்து அணியினருக்கிடையே இன்று தான் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட்துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது).

பட்டியலை இப்போது வெளியிட்டால் அதில் உள்ள வீரர்களுடன் டெண்டுல்கர், கங்குலி, சேவாக், திராவிட் போன்றவர் பேசிமனதை மாற்றிவிட வாய்ப்புள்ளதால் பட்டியலை டால்மியா வெளியிடாமல் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

ராபிங் சிங் தலைமையில் புதிய அணி?

டால்மியா வெளியிடாவிட்டாலும் கூட பி.சி.சி.ஐயிடம் தரப்பட்டுள்ள 25 வீரர்கள் அடங்கிய புதிய அணியின் பட்டியல் குறித்தவிவரங்கள் வெளியில் கசிய ஆரம்பித்துள்ளன. இதில் 13 வீரர்களை பி.சி.சி.ஐ. இறுதி செய்துவிட்டதாகவும் தெரிகிறது.

அதன்படி இந்த புதிய 13 பேர் அணிக்கு தமிழக வீரர் ராபின் சிங் தலைமை வகிப்பார் என்று தெரிகிறது. மேலும் தமிழகத்தைச்சேர்ந்த சடகோபன் ரமேஷ், ஹேமாங் பதானி, எல்.பாலாஜி ஆகியோரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர ரமேஷ்,கைளதம் கம்பீர், ககன் கோடா, டேனியல் மனோகர், கொனூர் வில்லியம்ஸ், ரோகன் கவாஸ்கர், ஜேகப்மார்டின், ரிஷிகேஷ் கனித்கர், ரீதிந்தர் சிங் சோதி, ஜே.பி. யாதவ், விஜய் பரத்வாஜ், ராகேஷ் படல்ே, சரன்தீப் சிங், முரள கார்த்திக்,ரமேஷ் பவார், சாய்ராஜ் பகுதுலே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், இர்பான் பர்தான், தெபஷிஷ் மொகந்தி, தீப் தாஸ்குப்தா,பிரசாத் ஆகியோரின் பெயர்களும் 25 பேர் பட்டியலில் உள்ளது.

இதில் தேர்வு செய்யப்பட்டுவிட்ட 13 பேர் பட்டியலில் தமிழக வீரர்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rahul dravidகதவு திறந்திருக்கிறது:

""வாரியத்தின் கதவுகள் திறந்தே உள்ளன. இந்திய வீரர்கள் தங்கள் மனத்தை மாற்றிக் கொண்டால் அணியில் இடம்பெறலாம். அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை அவர்களுடைய முடிவுக்காகக் காத்திருப்போம்"" என்றும்டால்மியா தெரிவித்தார்.

இதற்கிடையே தங்கள் சார்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரவி சாஸ்திரியை கிரிக்கெட்வாரியத்துடன் இது குறித்துப் பேசுவதற்காக அனுப்ப கங்குலி, டெண்டுல்கர் உள்ளிட்டவர்கள் முடிவு செய்தனர்.

ஆனால் கிரிக்கெட் வீரர்களுடன் நேரடியாகத் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர்கள் சார்பாகஅனுப்பப்படும் சாஸ்திரி போன்ற ஆட்களுடன் பேச முடியாது என்றும் கிரிக்கெட் வாரியம் அறிவித்து விட்டது.

இங்கிலாந்து வீரர்கள் ஆதரவு:

இந்நிலையில் ஐ.சி.சியின் சர்ச்சைக்குரிய இந்த ஒப்பந்த விவகாரத்தில் இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட்வீரர்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய வீரர்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் இங்கிலந்து வீரர்கள் கட்டுப்படுவார்கள் என்று அவர்களின்பிரதிநிதியான ரிச்சர்ட் பெவன் கூறினார். ஆனால், இங்கிலாந்து வீரர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்குமா என்பதுசந்தேகம் தான்.

ஆஸ்திரேலியா பல்டி:

நேற்று வரை இந்திய வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று திடீரென ஐ.சி.சியின் ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டு இந்திய வீரர்களின் காலை வாரிவிட்டுள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணம் ஐ.சி.சியின் செயல் தலைவராக உள்ள மால்க்கம் ஸ்பீடும் தலைவராக உள்ள மால்க்கம் கிரேயும் தான்.இவர்கள் தங்கள் நாட்டு வீரர்களின் மனதை மாற்றி கையெழுத்திட வைத்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து வீரர்கள் காலை வாரலாம்:

இதே போல இங்கிலாந்து வீரர்களும் இந்திய வீரர்களின் காலை வார வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம்மால்க்கம் ஸ்பீடு உள்ளிட்ட வெள்ளை இனத் தலைவர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் வீரர்களும் பகைக்க மாட்டார்கள்என்பது தான்.

ஐ.சி.சி. விளக்கம்:

இதற்கிடையே இலங்கையில் நடைபெறும் போட்டிகளுக்கு மட்டுமே இந்தப் புதிய விதிமுறை என்று ஐ.சி.சி.விளக்கமளித்துள்ளது.

வரும் 2007ம் ஆண்டு வரை ஐ.சி.சி. நடத்தும் அனைத்துப் போட்டிகளுக்கும் இந்த விதிமுறை அமலில் இருக்கும்என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்காக புதிய விதிமுறைகள்வகுக்கப்படும் என்றும் தற்போது கூறப்பட்டுள்ளது.

விளையாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய வீரர்கள் இந்தப் புதிய விதிமுறையின் ஒப்பந்தத்தில்கையெழுத்திட வேண்டும் என்றும் அவர்கள் பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்றும் ஐ.சி.சி. தலைவர் மால்கம் ஸ்பீட்கூறியுள்ளார்.

இப்பிரச்சனை குறித்து பேசுவதற்காக மால்கம் தற்போது மும்பை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டால்மியாவுக்கு எதிராக..:

இந்த விவகாரத்தையே மால்கம் ஸ்பீட் உள்ளிட்ட ஐ.சி.சி. நிர்வாகிகள் கிளப்பியதே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்டால்மியாவைக் குறி வைத்துத் தான் என்று கருதப்படுகிறது.

சமீபகாலமாகவே டால்மியா தனது பேச்சுக்களிலும் பேட்டிகளிலும் ஐ.சி.சியை வாரி வந்தார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கைபோன்ற தெற்காசிய நாடுகளால் தான் சர்வதேச கிரிக்கெட் பிழைத்துக் கொண்டிருப்பதாக அவர் கூறி வந்தார். இந்த அணிகள்விளையாட்டுக்குத் தான் ஸ்பான்சர் செய்ய உலகின் முக்கிய நிறுவனங்கள் போட்டி போடுகின்றன என்று அவர் கருத்து கூறி வந்தார்.

இதனால் டால்மியாவுக்குப் பாடம் புகட்டவும் தங்களாலும் சர்வதேச ஸ்பான்சர்களைப் பெற முடியும் என்பதைக் காட்டவும் தான்இந்த பிரச்சனையையே ஐ.சி.சி. கிளப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எப்படியோ, கிரிக்கெட் விளையாட்டு குத்துச் சண்டை விளையாட்டாக மாறிவிட்டது சோகம் தான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X