வீரப்பன் விவகாரம்: ஜெயாவுக்கு கருணாநிதி கேள்வி மேல் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பன் விவகாரத்தில் தூதர்களை அனுப்ப மாட்டோம், அவனுடைய நிபந்தனைகளை ஏற்க மாட்டோம் என்றுகூறிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா முந்தைய ஆட்சிக் காலத்தில் இதையெல்லாம் செய்துள்ளார்என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த ஜெயலலிதா, வீரப்பனைப் பிடிக்க முடியாததற்கு கருணாநிதிதான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வீரப்பனைப் பிடிக்கும் பொறுப்பை தேவாரம் என்னிடம் கேட்டதாகவும் அதற்கு நான் மறுத்து விட்டதாகவும்ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இப்போது தேவாரம் நியமிக்கப்பட்டு தான் 15 மாதங்கள் ஆயிற்றே. இன்னும் ஏன் வீரப்பனை அவர்களால் பிடிக்கமுடியவில்லை? இப்படியெல்லாம் நான் கேட்க மாட்டேன். ஏனென்றால் அதில் உள்ள சிரமத்தை நான் நன்றாகஅறிவேன்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் தான் வீரப்பன் வேட்டை தீவிரமானது என்றும் என்னுடைய ஆட்சிக் காலத்தில்நான் வீரப்பன் வேட்டையை நிறுத்துமாறு உத்தரவிட்டதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் தூதர்களை அனுப்ப மாட்டேன் என்றும் வீரப்பன் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட மாட்டேன்என்றும் அவர் இப்போது கூறியுள்ளார். இதே ஜெயலலிதா கடந்த ஆட்சிக் காலத்தில் செய்தது என்ன?

கடந்த 1994ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி எஸ்.பி. சிதம்பரநாதன் உள்ளிட்ட மூன்று பேரை வீரப்பன் கடத்திச் சென்றபோது, அதிரடிப்படையை வாபஸ் பெற வேண்டும் என்றும் தன் அண்ணன் மாதையனை விடுதலை செய்யவேண்டும் என்றும் தான் சரணடைந்தால் தன் மேல் வழக்குப் போடக் கூடாது என்றும் வீரப்பன் நிபந்தனைவிதித்தார்.

மறுநாளே வீரப்பனிடம் சிக்கியிருப்பவர்களின் உயிர் தான் முக்கியம் என்பதால் அவனைத் தேடும் பணிநிறுத்தப்படுவதாக கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அறிவித்தார்.

மேலும் வீரப்பனோ அல்லது அவருடைய பிரதிநிதியோ தன்னை வந்து சந்திக்கலாம் என்றும் கலெக்டர் கூறினார்.மூன்று பேரின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் வீரப்பனின் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகஅப்போதை தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கரும் கூறினார்.

அப்போதும் ஜெயலலிதா ஆட்சி தான். இப்போதும் அவருடைய ஆட்சி தான். ஆனால் இப்போது மட்டும்வீரப்பனின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவர் அறைகூவல் விடுத்தது ஏனோ? எனக்குத்தெரியவில்லை.

முந்தைய ஜெயலலிதா ஆட்சியின் போது வீரப்பனால் 63 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் அதற்குப் பின்என்னுடைய ஆட்சியிலோ வெறும் 3 பேர் மட்டும் தான் வீரப்பனால் கொல்லப்பட்டனர்.

மேலும் முந்தைய அவருடைய ஆட்சிக் காலத்தில் வீரப்பன் தரப்பைச் சேர்ந்த 121 பேர் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து வந்த என்னுடைய ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட வீரப்பன் தரப்பைச் சேர்ந்தவர்களின்எண்ணிக்கை 135.

அதிரடிப்படைக்கான செலவுகளைப் பற்றிக் கூறிய ஜெயலலிதா, அது துவக்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த மார்ச்31ம் தேதி வரை ரூ.17.61 கோடி செலவாகியுள்ளது என்று குறிப்பிட்டார். அடுத்து கூறும் போது, 2001-02ம்ஆண்டில் மட்டும் இதுவரை ரூ.9.42 கோடி செலவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அப்படியானால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் செலவான தொகையில் பாதிக்கும் மேற்பட்ட தொகை கடந்தஓராண்டில் செலவாகியுள்ளது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் முந்தைய திமுக அரசின் மீது ஜெயலலிதா குற்றம் சாட்டுவது அவருடைய வழக்கமான திசை திருப்பும்திறமையையே காட்டுகிறது.

தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ள இந்தப் பிரச்சனையை அரசியல் ஆக்காமல் முன்னாள் கர்நாடக அமைச்சர்நாகப்பாவை பத்திரமாக மீட்பதிலும், வீரப்பனைப் பிடிப்பதிலும் வெற்றி பெற்றால் இரு மாநில அரசுகளையும்பாராட்டலாம் என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+