ஆபாச புத்தங்கள்: பழைய பேப்பர் கடைகளில் போலீசார் ரெய்டு
திருச்சி:
திருச்சியில் ஆபாச புத்தகங்களின் விற்பனை கொடி கட்டிப் பறந்து வருகிறது.
இதையடுத்து ஆபாச புத்தகங்களை விற்பவர்களின் கடைகள், வீடுகள், பழைய பேப்பர் கடைகளில் போலீசார் கடந்த சிலநாட்களாக அதிரடி சோதனை நடத்தி ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
சீன் புக் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்தப் புத்தகங்களின் பெயர்கள் சுத்தத் தமிழில் இருப்பது வழக்கம். மருதம், இரவுக்கன்னி, விருந்து என்று ஆரம்பித்து சரோஜா தேவி என்ற பெயர் வரை நூற்றுக்கணக்கான பெயர்களில் இந்தப் புத்தகங்கள் வெளிவருகின்றன.
10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விலை கொண்ட இந்த புத்தங்களில் கசமுசா படங்கள், ஆபாசக் கதைகள், ஆபசமான ஸ்கெட்செய்யப்பட்ட படங்கள் அடங்கியுள்ளன.
பஸ் ஸ்டாண்டுகள். சீன் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களின் அருகே உள்ள கடைகளில் சக்கைபோடு போடும் இந்தப்புத்தகங்களில் விற்பனை திருச்சியில் எப்போதுமே மிக அதிகம். இந்தப் புத்தகங்களுக்கு விளம்பர போஸ்டர்களும் அடித்துஒட்டும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
கடைகளில் இவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதிக லாபம் கிடைப்பதால் இந்தப் புத்தகங்களை விற்காதபெட்டிக் கடைகள் மிகக் குறைவு.
திருச்சியில் சமீப காலமாக இந்தப் புத்தகங்களின் விற்பனை மிக அதிகாகியுள்ளது. இதற்கான விளம்பர போஸ்டர்களும்சுவர்களை பெரும் அளவில் ஆக்கிரமிக்க ஆரம்பித்ததுள்ளன.
இதையடுத்து பல்வேறு சமூக நல அமைப்புகளும் பெண்கள் அமைப்பினரும் இந்தப் புத்தகங்களை விற்பவர்கள் மீதுநடவடிக்கை கோரியும் படு ஆபாசமான போஸ்டர்களை அகற்றக் கோரியும் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே போராட்டம்நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இந்த சீன் புத்தகங்கள் விற்கப்படும் கடைகளில் போலீசார் ரெய்டு நடத்தினர். கடைகளுக்குள் கட்டுக் கட்டாகஇந்தப் புத்தகங்கள் சிக்கின.
மேலும் பழைய பேப்பர் கடைகளிலும் இந்தப் புத்தகங்கள் விற்கப்படுவதால் இந்தக் கடைகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. பலபழைய பேப்பர்காரர்களின் வீடுகளிலும் ரெய்டு நடந்தது.
இதில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள ஆபாச புத்தகங்கள் சிக்கின. இது தொடர்பாக பழைய பேப்பர் கடைக்காரர் உள்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சீன் புத்தகங்கள் காவல் நிலையங்களில் மலை போல குவிந்து கிடக்கின்றன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications