காசி-ராமேஸ்வரம் இடையே விரைவில் புதிய ரயில்
மதுரை:
இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களான ராமேஸ்வரம் மற்றும் காசி ஆகிய நகரங்களுக்கிடையேஅடுத்த ஆண்டு முதல் புதிய ரயில் விடப்படும் என்று ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.
சென்னையிலிருந்து மதுரை கிளம்பிய கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்று துவக்கி வைத்த மூர்த்தி, அதே ரயிலைஇன்று மதுரையில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்தக் கூடல் எக்ஸ்பிரஸ் ரயில் அனைத்து வசதிகளுடனும் கூடிய ஜனசதாப்திஎக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படும்.
தமிழகத்தில் உள்ள புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கும் உத்தரப் பிரதேசத்திலுள்ள காசிக்கும் இடையேஅடுத்த நிதி ஆண்டு முதல் புதிய ரயில் ஒன்று இயக்கப்படும்.
திருச்சி-ராமேஸ்வரம் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகதிருச்சி-மானாமதுரை பாதை விரைவில் அகல ரயில் பாதையாக மாறவுள்ளது. இதற்காக ரூ.75 கோடிஒதுக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் குறித்து வரும் 13ம் தேதி மதுரையில் அனைத்துக் கட்சி எம்.பிக்களின்கூட்டம் நடைபெறுகிறது. தங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய ரயில் வளர்ச்சித் திட்டங்கள்குறித்து அப்போது எம்.பிக்கள் அறிக்கைகளைத் தாக்கல் செய்யவுள்ளனர்.
அந்த அந்தப் பகுதி எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் இவ்விஷயத்தில் ஒற்றுமையுடன் செயல்பட்டால்தமிழகத்திற்குத் தேவையான அனைத்து ரயில் திட்டங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.
கூடல் நகரில் ரூ.1.2 கோடி செலவில் ஒரு ரயில்வே நிலையத்தை அமைப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக மதுரை எம்.பிக்களான மோகன் (மார்க்சிஸ்ட்) மற்றும் அக்னிராஜ் (திமுக) மற்றும் எம்.எல்.ஏவானவளர்மதி ஜெபராஜ் ஆகியோர் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். எஞ்சிய ரூ.90 லட்சம் வரும் ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என்றார் மூர்த்தி.
முன்னதாக சிவகங்கையில் ஒரு ரயில்வே முன்பதிவு மையத்தை மூர்த்தி தொடங்கி வைத்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications