வைகோவின் சிறைவாசம் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு
சென்னை:
பொடா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சிறைக் காலம் மேலும 5நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜூலை 11ம் தேதி வைகோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைதாகி இன்றுடன் 85நாட்கள் முடிவடைகின்றன. அவர் மீது இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை, விசாரணையும்தொடங்கவில்லை.
இந் நிலையில் வைகோ இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரைவிடுதலை செய்ய வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
ஆனால், வைகோவை தொடர்ந்து சிறையில் வைக்க அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து வரும்9ம் தேதி (கைதாகி 90 நாட்கள் முடிவடையும் நாள்) வரை வைகோவை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக வைகோவைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நாளை கணக்கில் வைத்து இன்றுடன் அவரதுசிறைக்காலம் 90வது நாளை எட்டியதாகக் கூறப்பட்டது. ஆனால், 9ம் தேதி தான் அவரது 90 நாள் சிறைவாசம்முடிவடைகிறது.
பொடா சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்து விசாரணை இல்லாமல், குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யாமல்90 நாட்களுக்கு மேல் சிறையில் வைக்க முடியாது என வைகோவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மதிமுகவினர் பாதயாத்திரை:
மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து எட்டயபுரத்திலிருந்து மதுரைக்கு"பாதயாத்திரை" மேற்கொள்ளப் போவதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மகாகவி பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்திலிருந்து வரும் 9ம் தேதி இந்தப் பாதயாத்திரை தொடங்குகிறது.மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் கண்ணப்பன் உள்ளிட்ட ஏராளமானமதிமுக தொண்டர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அங்கிருந்து சுமார் 250 கி.மீ. தூரம் நடைப் பயணம் செய்து வரும் 17ம் தேதி அவர்கள் மதுரையை அடைவார்கள்.பின்னர் மதுரையில் வைகோ கைதைக் கண்டித்து ஒரு கண்டனப் பொதுக் கூட்டமும் நடைபெறும் என்று அந்தச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் திருச்சியிலிருந்து வேலூருக்கு மதிமுகவினர் இதேபோல் நடைப் பயணம்மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications