பிப்ரவரியில் சென்னை மேயர் தேர்தல்: அதிகாரிகள் நியமனம்
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறக் கூடும் என்றுதெரிகிறது.
அதிமுக அரசின் ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தின் மூலம் மேயராக இருந்த ஸ்டாலினின் பதவி பறிபோனது.இதையடுத்து நடந்த சட்டப் போருக்குப் பின்னர் மேயர் பதவி காலியானதாக சென்னை உயர்நீதிமன்றம்அறிவித்தது.
இந் நிலையில் அடுத்த மேயர் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன. 30க்கும் மேற்பட்ட இளநிலைஅதிகாரிகள், தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக மாநகராட்சியின் பல்வேறு டிவிஷன்களிலிருந்தும் தலைமைஅலுவலகமான ரிப்பன் கட்டடத்திற்கு சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை இவர்கள் கவனித்து வருகின்றனர்.
இந் நிலையில் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதவாக்கில் தேர்தல் நடைபெறும் என அந்த அதிகாரிகளில் ஒருவர்நம்மிடம் தெரிவித்தார்.
இத் தாக்குதலுக்ருப் பின் காங்கிரஸ் தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.












Click it and Unblock the Notifications