ரஜினியை சந்தித்தார் ஸ்டாலின்
சென்னை:
உண்ணாவிரதம் இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்தை திமுக இளைஞரணித் தலைவர் மு.க. ஸ்டாலின் மேடையில் வந்து சந்தித்துவாழ்த்தினார்.
ரஜினிக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்திய ஸ்டாலின் மேடையில் அமர்ந்துள்ளார்.
அவருடன் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி ஆகியோரும்வந்திருந்தனர்.
பின்னர் பேசிய ஸ்டாலின், எங்கள் தலைவர் கருணாநிதியின் தொகுதியான சேப்பாக்கத்தில் தனது உண்ணாவிரதத்தை ரஜினிநடத்துவது மிகுந்த பெருமை தருகிறது என்றார்.
ரஜினியின் போராட்டத்துக்கு திமுக ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று மதுரையில் நடந்த ரஜினி ரசிகர்களின் உண்ணாவிரதத்தை ப.சிதம்பரத்துடன் சேர்ந்து மு.க. அழகிரி தான் துவக்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் அழகிரி விவகாரம் பெரிதாகும்போதெல்லாம் ரஜினியை வைத்துத் தான் அவருடன் பேசி பிரச்சனையை அமுக்குவதுகருணாநிதியின் வழக்கம் என்பது நினைவுகூறத்தக்கது.
ரஜினியின் உண்ணாவிரத மேடைக்கு திமுக தலைவர் கருணாநிதியே வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முதலில்ஸ்டாலின் வந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications