இன்டர்நெட் "செக்ஸ்" டாக்டர் பிரகாஷின் மருத்துவப் பட்டம் பறிபோகுமா?
சென்னை:
இன்டர்நெட் மூலம் ஆபாசப் படங்களை வெளியிட்டு விற்பனை செய்து பரபரப்பை ஏற்படுத்திய சென்னை டாக்டர்பிரகாஷிடம் விளக்கம் கேட்க தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
அவரது விளக்கம் திருப்தி தராவிட்டால் தற்காலிகமாக அவரது உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்று அதுஅறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மருத்துவக் கவுன்சிலின் தலைவர் டாக்டர் ஜி.எம்.கே. ரெட்டி கூறுகையில்,
பிரகாஷ் விஷயத்தில் நாங்கள் தாமதமாக செயல்படுகிறோம் என்று கூற முடியாது.
பிரகாஷ் விவகாரம் தற்போது கோர்ட்டில் உள்ளது. அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான்இந்தத் தாமதம்.
தற்போது பிரகாஷிடம் விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பதிலில் திருப்தி இல்லையென்றால்தற்காலிகமாக அவரது உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும்.
கோர்ட்டில் அவர் மீதான புகார்கள் உண்மையென்று நிரூபிக்கப்பட்டால், நிரந்தரமாக அவர் டாக்டர் தொழிலில்ஈடுபட தடை விதிக்கப்படுவார் என்றார் ரெட்டி.












Click it and Unblock the Notifications