ராமதாஸ் குறித்து மத்திய அமைச்சரிடம் ரஜினி புகார்
சென்னை:
தன்னை தனிப்பட்ட முறையில் பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்சத்ருகன் சின்ஹாவிடம் நடிகர் ரஜினிகாந்த் புகார் கூறினார்.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின்உடல்நிலையை அறிவதற்காக சென்னை வந்துள்ளார் சத்ருகன் சின்ஹா.
இந்நிலையில் அவரை டெலிபோனில் தொடர்பு கொண்டு ரஜினி பேசுகையில்,
ராமதாஸ் தொடர்ந்து நடிகர்களையும் ரசிகர் மன்றங்களையும் தாக்கிப் பேசி வருகிறார். இது நடிகர்களின்மனத்தைப் புண்படுத்துவதோடு, ரசிகர்களையும் அவமானப்படுத்துவதாக உள்ளது.
இவற்றைத் தவிர தனிப்பட்ட முறையில் என்னையும் வேறு சில நடிகர்களையும் பற்றி அவதூறாகப் பேசிவருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவும் உள்ளது என்பதால் தான் உங்களிடம் இதைப் பற்றிக் கூறுகிறேன். இதுதொடர்பாக அவரை நீங்கள் கண்டிக்க வேண்டும்.
மேலும் நடிகர்களையும் ரசிகர்களையும் ராமதாஸ் கேவலப்படுத்திப் பேசாமல் இருக்குமாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போனில் பேசினார் ரஜினி.
இந்த விவரங்களைப் பின்னர் நிருபர்களிடம் கூறிய சத்ருகன் சின்ஹா மேலும் கூறுகையில்,
அரசியலில் சுய விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவே நடிகர்களை ராமதாஸ் தாக்கிப் பேசி வருகிறார். நானும்நடிகன் தான் என்ற முறையில் இதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
ரஜினிக்குக் கெட்ட பெயர் வரவேண்டும் என்ற நோக்கத்துடன் அவரையும் கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார்.
ரஜினி கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போன்றநடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து சிறப்பாக சேவை செய்துள்ளார்களே என்றார் சத்ருகன் சின்ஹா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications