For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுப்புரம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 12 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 6 பெண்கள்உள்பட 12 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாண்டிச்சேரி செல்லும் பாதையில் உள்ள கண்டமங்கலம் அருகே உள்ள மிட்டா மண்டகப்பட்டை சேர்ந்தசெல்வமூர்த்தி என்பவர் கொட்டகை போட்டு பட்டாசுகளைத் தயாரித்து வந்தார்.

தீபாவளி நெருங்கிக் கொண்டிருப்பதால் இங்கு பட்டாசுகள் தயாரிப்பு வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

நேற்று இரவு ஆண்களும் பெண்களுமாக சுமார் 20 பேர் பட்டாசுகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒரு 15 வயது சிறுவன் பட்டாசுகளைப் பாக்கெட்டுகளில் போட்டு மெழுகுவர்த்தி தீயைக்கொண்டு அவற்றை இளக்கி, மூடிக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த மெழுகுவர்த்தியிலிருந்து திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. இந்தத் தீ மளமளவென்று பரவியதால்அங்கிருந்த பட்டாசுகள் படபடவென்று வெடிக்கத் தொடங்கின.

இதனால் தீ மேலும் பரவியது. கொட்டகை முழுவதும் வேகமாகத் தீ பரவியது. இதையடுத்து அங்குவைக்கப்பட்டிருந்த அனைத்துப் பட்டாசுகளும் வெடித்துச் சிதறின.

இந்தப் பயங்கர பட்டாசு வெடிவிபத்தில் ஆறு பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிஉயிரிழந்தனர். இறந்தவர்களின் விவரம்:

மகாலட்சுமி (20), முருகன் (19), தவசெல்வி (21), பாரதி (19), பன்னீர்செல்வம் (18), வினோத்குமார் (16),கமலக்கண்ணி (22), இந்திரா (20), சுரேஷ் (22) மற்றும் முத்துலட்சுமி (35).

இவர்களைத் தவிர மேலும் எட்டு பேர் தீக்காயங்களுடன் பாண்டிச்சேரி அரசு மருத்தவமனையில்சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் இன்று காலை இரண்டு பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதையடுத்துஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் மேலும் சிலருடைய உடல் நிலைமிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இவ்விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X