For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதமாற்ற தடை: சிறுபான்மை கல்வி நிறுவனங்களை மூட உயர் நீதிமன்றம் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து தாங்கள் நடத்தி வரும் பள்ளி, கல்லூரிகளை மூடப் போவதாக சிறுபான்மைஅமைப்புகள் அறிவித்துள்ளது சட்டப்படி ஏற்புடையது அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மை அமைப்புகள் இன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றன. இதையொட்டி இன்று தாங்கள் நடத்தி வரும் கல்விநிறுவனங்களையும் மூட அவை திட்டமிட்டன.

இதை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி, அகில பாரதி வித்யார்த்தி பவன் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் மத சார்பான போராட்டத்திற்காக கல்விநிறுவனங்களை மூடுவது சட்ட விரோதமானது என்று அறிவிக்கக் கோரியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் தமதுஉத்தரவில்,

கோர்ட்டிற்கு மதங்கள் தெரியாது. எது சட்டத்திற்குட்பட்டது, எது சட்ட விரோதமானது என்பதை மட்டுமே நாங்கள்பார்ப்போம். எங்களது சட்ட அறிவுக்கு எட்டிய கருத்துக்களை இப்போது தெரிவிக்கிறோம்.

சிறுபான்மை அமைப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்களை மூடுவதாக அறிவித்துள்ளது சட்டப்பூர்வமானகாரணத்திற்குட்பட்டதல்ல.

சட்டத்திலோ, அரசியல் சாசனத்திலோ எந்த இடத்திலும் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கல்வி நிறுவனங்களை மூடுவதன் மூலம் சம்பந்தப்பட்ட மதத்தைச் சேராத மாணவர்களும் இந்தப் போராட்டத்தில்பங்கேற்க நேரிடும். இது பல்வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதை கோர்ட் விரும்பவில்லை.

மாணவர்களை மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராட்டத்தில் ஈடுபடுத்தக் கூடாது. அது அவர்களதுமதச்சார்பின்மை மனப்பான்மையை பாதித்து விடும்.

படிப்பு, விளையாட்டு போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே மாணவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்என்று நீதிபதிகள் கூறினர்.

இதன் மூலம் கல்வி நிறுவனங்களை மூடி போராட்டம் நடத்தினால் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படலாம்என்பதை நீதிமன்றம் சூசகமாக உணர்த்தியுள்ளது.

ஜெயலலிதாவும் எதிர்ப்பு:

இதற்கிடையே அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களை அரசின் அனுமதி இல்லாமல் மூட முடியாது என முதல்வர் ஜெயலலிதாவும் நேற்றுகூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று விடுமுறை:

ஆனால், இன்று தாங்கள் நடத்தும் போராட்டத்தையொட்டி சிறுபான்மையின அமைப்புகள் தாங்கள் நடத்தும்பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளன.

மாநிலம் முழுவதிலும் கிருஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்என்றும், அதில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும்,மாணவர்கள் இதில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்றும் போராட்டக்குழுவைச் சேர்ந்த பாதிரியார் தேவசகாயம்தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசரும் எதிர்ப்பு:

இந்நிலையில் கல்வி நிறுவனங்களை மத செயல்பாட்டுக்காக மூடி வேலைநிறுத்தம் செய்ய சிறுபான்மைஅமைப்புகள் முடிவு செய்துள்ளது சரியான செயலன்று என்று சமீபத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய கப்பல் துறைஅமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

மதமாற்றத் தடை சட்டம் தவறான ஒன்று அல்ல. அது தவறாகப் பயன்படுத்தப்படும் என்ற அச்சம்தேவையில்லை.

இந்த சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளன. இதையொட்டிகல்வி நிறுவனங்களை மூடுவது சரியான நடவடிக்கை அல்ல. கல்வியில் மதத்தை திணிப்பதை ஏற்றுக் காள்ளமுடியாது என்றார் திருநாவுக்கரசர்.

கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கண்டித்து கிருஸ்தவ, முஸ்லீம் அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X