கடல் அரிப்பைத் தடுக்க ரூ.95 கோடியில் கடலில் தடுப்புச் சுவர்
சென்னை:
திருவொற்றியூர் கடல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக ரூ.95 கோடி மதிப்பில் தடுப்புச்சுவர் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் இது தொடர்பாக இன்று சட்டசபையில் பதிலளித்துப் பேசுகையில்,
திருவொற்றியூர், எண்ணூ<�ர் கடல் பகுதியில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு சாலைகள், வீடுகளுக்கு பாதிப்புஏற்படுகிறது.
இதைத் தடுப்பதற்காக திருவொற்றியூர் பகுதியில் 3.5 கிலோமீட்டர் தொலைவிற்கு கடலில் தடுப்புச் சுவர் அமைக்கதிட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு ரூ.95 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஒப்புதலுக்காக மத்திய அரசிடம்அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு விடும் என்றார் பன்னீர்செல்வம்.
Bsimi-96;-96;A nmh 11 ]_UPЦlt;/b>
-->


