நதிகள் இணைப்பு: என்ஜினியர்களுடன் ரஜினி ஆலோசனை
சென்னை:
நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து என்ஜினியர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
காவிரி விஷயத்தில் உண்ணாவிரதம் இருந்துவிட்டு வந்த பின் கங்கை- காவிரி இணைப்பு குறித்து பல தரப்பினருடனும் ஆலோசனை நடத்திவருகிறேன். என்ஜினியர்களுடனும் பேசியுள்ளேன்.
எவ்வளவு செலவாகும், எவ்வளவு நாளாகும், எத்தனை பேரின் உடல் உழைப்பு தேவைப்படும் போன்ற விவரங்களைத் திரட்டி கம்யூட்டரில்பதிவு செய்து வருகிறேன்.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் தொலைபேசியிலும் பேசினேன். இருவருமே நதிகள்இணைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நேரத்தில் தான் என்னை நண்பர் சோ வந்து சந்தித்தார். நான் இதுவரை திரட்டிய விவரங்களை முதலில் வெளியில்தெரியப்படுத்துமாறு கூறினார். இதனால் தான் ஹிந்து நாளிதழிடம் விவரங்களைச் சொன்னேன்.
முழு விவரங்களைத் திரட்டிய பின்னர் மக்கள் மத்தியில் அதை வெளியிடுவேன் என்றார் ரஜினி.
-->


