For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பின் லேடனின் 5வது மனைவி, மகன் பிடிபட்டனர்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

ஒசாமா பின் லேடனின் 5வது மனைவியான அமல் அல் சத்தாவும், அவரது தந்தை மற்றும் சதோதரர் ஆகியோர் ஏமன் நாட்டில்பிடிபட்டுள்ளனர்.

அதே போல பின் லேடனின் மகன் ஒருவர் ஈரான் நாட்டில் பிடிபட்டுள்ளார்.

20 வயதைக் கூட எட்டாத அமல்-அல்-சத்தா சில நாட்களுக்கு முன் ஏமன் நாட்டுப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். இவரதுகைக் குழந்தை சபியாவும் பிடிபட்டுள்ளது.

இவர் ஏமனின் இப் என்ற நகரில் உள்ள தனது தந்தையின் வீட்டில் பதுங்கியிருந்தார். இவர் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்த ஏமன் நாட்டுபோலீசார் உடனே வீட்டை சுற்றி வளைத்தனர். ஆனால், சதாவின் பாதுகாப்பு இருந்த தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி சுட்டனர்.

கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சதாவையும் அவரது தந்தை மற்றும் சகோதரரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பாதுகாப்புக்கு இருந்தஅல்-கொய்தா தீவிரவாதிகளும் பிடிபட்டனர்.

அமல்-அல்-சத்தா தான் பின் லேடனின் கடைசி மனைவியாவார். இவர் லேடனுக்கு மிகவும் விருப்பமானவர் என்றும் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க குண்டுவீச்சுத் தாக்குதல் நடந்தவுடன் உயிருடன் இருக்கும் தனது 3 மனைவிகளையும்குழந்தைகளையும் பின் லேடன் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.

அமல் மற்றும் குழந்தை சபியாவையும் பின் லேடனின் மகன்களில் ஒருவர் ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்துக் கொண்டுவெளியேறினார். முதலில் ஆப்கானிஸ்தானில் பல குகைகளில் பதுங்கி வாழ்ந்த இவர்கள் பின்னர் பாகிஸ்தானில் ஊடுருவியுள்ளனர்.பின்னர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஏமன் நாட்டுக்குள் புகுந்துள்ளனர்.

ஏமனில் உள்ள தனது தந்தையின் வீட்டில் இவர் கடைசியில் தஞ்சம் புகுந்துள்ளார். இவருக்குப் பாதுகாப்பாக லேடன் தனது தீவிரவாதப்படையினரையும் பின்னர் அனுப்பி வைத்துள்ளார். ஏமனில் தனது மனைவியை பின் லேடன் வீட்டுக் காவலில் வைத்திருந்ததாகக்கருதப்படுகிறது.

அமலின் தந்தை ஏமன் நாட்டைச் சேர்ந்த முக்கிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். லேடனுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படுகிறது.அமலின் சகோதரர் ஆப்கானிஸ்தான் சென்று லேடனுடன் இணைந்து போராடியவர்.

அப்போது தான் தனது தங்கையை லேடனுக்கு மணமுடித்து வைக்க இவர் முடிவு செய்ததாகக் கருதப்படுகிறது.

ஈரானில் மகன் பிடிபட்டான்:

இதற்கிடையே பின் லேடனின் மகன் ஒருவனை ஈரான் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு இல்லாததால் அவரை சவுதி அரேபியா அல்லது பாகிஸ்தானிடம் ஒப்படைத்துவிடஈரான் திட்டமிட்டுள்ளது.

பிடிபட்டவரின் பெயர் விவரம் தெரியவில்லை.

ஆனால், லேடனின் மூத்த மகனான சத்தா பின் லேடன் (வயது 22) தான் இப்போது அல்-கொய்தாவை தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.இவர் தவிர முகம்மத் பின் லேடன், அகம்மத் பின் லேடன் ஆகிய மகன்களும் தங்களது தந்தையின் தீவிரவாத இயக்கத்தை ஆதரித்துவருகின்றனர்.

45 வயதான வின் லேடன் 5 முறை திருமணம் செய்தவர். ஒரு மனைவியை விவகாரத்து செய்துவிட்டார். அவரது இன்னொரு மனைவிஈரானிலும், இன்னொரு மனைவி ஆப்கானிஸ்தானிலேயே இருப்பதாகவும் கருதப்படுகிறது. இன்னொருவர் கதி என்ன ஆனது என்றுதெரியவில்லை.

5 மனைவிகள் மூலம் லேடனுக்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.

பின் லேடனின் உயில்:

இதற்கிடையே பின் லேடன் தனது உயிலை எழுதிவிட்டதாக அரேபிய வார இதழான அல்-மஜிலா கூறியுள்ளது.

அதில், தனது மனைவிகள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது எனவும், அல்-கொய்தாவில் சேர்ந்து போராட வேண்டாம் எனதனது மகன்களுக்கும் லேடன் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

தனது உயிலில் பின் லேடன் மிகவும் வருத்தத்துடன் பல வரிகளை எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் ஒன்று தான் தனது மகன்களைபோராட்டத்தில் இறங்க வேண்டாம் என்று அவர் விடுத்துள்ள கோரிக்கையாகும்.

லேடன் உயிருடன் உள்ளார்:

இதற்கிடைய பின் லேடன் உயிருடன் இருப்பதாக அமெரிக்க செய்தித் தளம் கூறியுள்ளது.

வோர்ல்ட் நெட் டெய்லி என்ற ஆன்லைன் செய்தித் தளம், பின் லேடன் பாகிஸ்தானில் வசித்து வருவதாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து,ஜெர்மனிக்கு எதிராக பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் தப்பி வர 15 மில்லியன் டாலர்களை பின் லேடன் செலவிட்டதாகவும் அவரைபழங்குடியினர் பாதுகாப்பாக பாகிஸ்தானுக்குள் கொண்டு வந்ததாகவும் அந்தத் தளம் தெரிவிக்கிறது.

உலக அளவில் தீவிரவாதிகள் குறித்து இந்தத் தளம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X