சென்னை வந்தது ஜப்பான் கடற்படைக் கப்பல்
சென்னை:
சென்னையில் சர்வதேச கடற்படையினர் கலந்து கொள்ளும் கடல் மாநாடு நாளை தொடங்குகிறது.
இதில் 15 நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர், கடலோரக் காவல் படைகள், மற்றும் கடல் சார்ந்த அமைப்புகள் பங்கேற்கின்றன. சர்வதேகடல் பகுதியில் ஒத்துழைப்பது, விபத்துக்குள்ளான கப்பல்களை காப்பாற்றுவது, கடலில் உயிர்களைக் காப்பது, செயற்கைக் கோள் மூலம்தேடுதல் வேட்டை நடத்துவது ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப்படும்.
சென்னையில் கோவலம் கடல்கரைப் பகுதியில் இந்த மாநாடு நடக்கும்.
இந்த மாநாடு முடிந்த பின்னர் இந்திய கடலோரக் காவல் படையும் ஜப்பான் நாட்டின் கடலோரக் காவல்படையும்கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதற்காக ஜப்பானின் கடற்படைக் கப்பலான யஷிமா சென்னைவந்துள்ளது.
வரும் 9ம் தேதி வங்கக் கடலில் இந்தப் பயிற்சி நடக்கும். சென்னை வந்த இந்தக் கப்பலை இந்திய கடலோரக் காவல் படையினர்நடுக்கடலில் சென்று வரவேற்று அழைத்து வந்தனர்.
-->


